பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

g

‘கல்வெட்டுக்களைப் பார்த்துக் கொண்டே மலையுச்சியினை அடைகின்றோம்.

மலையின்மீதுள்ள திருக்கோயிலில் தெற்கு நோக்கிய திருமுகமண்டலங் கொண்டு கிடந்த திருக்கோலத்தில் அரங்கநாதன் சேவை சாதிக்கின்றான். அவனையும் தரிசிக்கின்றோம். இவன் கொண்டுள்ள சயனத் திருக்கோலத்தை மாணிக்க சயனம்’ என்று கூறுவர். ‘பாலகனாய் ஏழுலகு உண்டு ஆலிலை மேல் துயிலும்’ நிலையும், ‘உறங்குவான் போல் யோகு செய்யும் நிலையும் நமது நினைவிற்கு வர அவற்றில் ஆழங்கால் படுகின்றோம். ‘என் அரங்கத்து இன்னமுதர், குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில், எழுகமலப் பூ அழகர்’ என்று ஆண்டாள் அரங்கனின் திருமேனி அழகில் ஈடுபட்டதை நினைத்து அந்த அநுபவத்தைப் பெற முயல்கின்றோம். அஃது என்ன அவ்வளவு எளிதா? ‘அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக், கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று பாண் பெருமான் பெற்ற அநுபவத்தை அடைகின்றோம். தீர்த்தம், திருத்துழாய் பெற்று, சடகோபம் சாத்தப்பெற்று எம்பெருமானை வலங்கொள்ள உளங்கொள்ளுகின்றோம்.

சுற்றுப் பிராகாரத்தின் வழியாக வலம்வருங்கால் முதலாவதாக உலகளந்த மூர்த்தி நடந்த திருக்கோலத்தில் சேவை சாதிப்பதைக் காண்கின்றோம். இந்த மூர்த்தியை ஆழ்வார் ‘குறளாகி நிமிர்ந்தவன்” என்று மங்களாசாசனம் செய்கின்றார். இந்த எம்பெருமானின் சந்நிதியில்,

“காண்டாவனம் என்பதுஓர் காடுஅமரர்க்கு

அரையன்னது, கண்டு.அவன் நிற்க,முனே மூண்டுஆர் அழல்உண்ண முனிந்ததுவும்:

அது அன்றியும் முன்உலகம் பொறைதீர்த்து ஆண்டான், அவுனன்.அவன் மார்வுஅகலம் உகிரால்வகிர் ஆகமுனிந்து, அரியாய் நீண்டான், குறளாகி நிமிர்ந்தவனுக்கு

இடம்மாமலை ஆவது நீர்மலையே.”

(அமரர்க்கு அரையன்-இந்திரன்; கண்டு நிற்க - பார்த்துக் கொண்டிருக்க ஆர் அழல் - தீக்கடவுள்; முனிந்ததுவும்-சீறி நிமித்தவனும்: பொறை-பாரம்: அவுனன் - இரணியன்:உகிர்-நகம்; அகலம் மார்பு-அகன்ற மார்பு வகிர் ஆக இரு பிளவாம்படி அரி - நரசிங்கம்)

30. அமலனா - 10. 31. பெரி. திரு . 2. 4: 2.