பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்மலை நீர்வண்ணன் 143

என்ற பாசுரத்தை ஒதுகின்றோம். கிருஷ்ணாவதாரத்தில் எம்பெருமான் காண்டவ வனத்தை அங்கியங் கடவுள் உண்ண அநுமதித்த வரலாற்றிலும், நரசிம்மாவதாரத்தில் அவன் இரணியனது நெஞ்சினைப் பிளந்து கொன்ற வீரச் செயலிலும், குள்ளனாகச் சென்று மாவலியிடம் மூவடி நிலம் பெற்று உலகளந்த மூர்த்தியாகப் பேருருவங் கொண்ட அற்புதச் செயலிலும் ஆழ்வார் ஈடுபட்டுப் பேசுவதைக் காண்கின்றோம். காண்டவ வனத்தின் நிகழ்ச்சியை நினைந்தே இந்தத் தலத்துப் புராணமும் எழுந்திருக்க வேண்டும். மலையில் ஏறும்போது ‘காண்டவ வனத்தில் தோயாத்திரி’ மலை வாசல்’ தொடர் அதன் படிவாயிலில் பொறிக்கப் பெற்றிருந்ததைக் கண்டோமல்லவா?

இந்த மூர்த்தியிடம் விடைபெற்று வருங்கால் பிராகாரத்தி லேயே பிரகலாதனுக்குக் காட்சி தந்த வீரநரசிங்கமூர்த்தி சாந்தமூர்த்தியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளி யிருப்பதைக் கண்டு மகிழ்கின்றோம். இந்த மூர்த்தியைக் காணப் போகிறோம் என்று நினைந்தே ஆழ்வார்,

....” அவுணன் அவன் மார்வு அகலம்

உகிரால்வகிர் ஆகமுனிந்து, அரியாய் நீண்டான்’

என்று முற்பாசுரத்திலேயே ஆழங்கால் பட்டார் போலும். இந்த எம்பெருமான் சந்நிதியில்,

“தாங்காததுஓர் ஆள்அரிஆய், அவுணன்தனை

வீடமுனிந்து அவனால் அமரும் பூங்கோதையார் பொங்குளி மூழக்விளைத்து

அது அன்றியும் வென்றிகொள் வாள்.அமரில் பாங்குஆக முன்ஐவரொடு அன்புஅளவி,

பதிற்றைந்து இரட்டிப் படைவேந்தர்பட நீங்காச் செருவில் நிறைகாத்தவனுக்கு

இடம்மா மலைஆவது நீர்மலையே.”

(ஆள்அரி-நரசிங்கம்; அவுணன்-இரணியன்; வீட-மடிய, பூங்கோதையர் - இரணியனின் மனைவியர்: வென்றிவாள் அமர்-பாரதப்போர்; அன்பு அளவி -

உறவு பண்ணி, பதிற்றைந்து இரட்டி வேந்தர்-நூற்றுவர்; செரு-போர்: நிறை - திரெளபதியின் நலம்)

என்ற பாசுரத்தை ஓதி உளங்கரைகின்றோம். இங்ஙனம் மூன்று மூர்த்திகளையும் சேவித்து மனநிறைவு பெற்ற நிலையில்

32. தோய் - தண்ணிர் ; அத்திரி -மலை; தோயாத்திரி - நீர் மலை. 33. பெரி. திரு . 2. 4:4.