பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருஇடஎந்தை எம்பெருமான்

‘'சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்’ என்ற கொள்கையில் ஊற்றமுடைய ஆழ்வார்கள் எம்பெருமானின் அநுபவத்தைப் பலவிதமாகப் பெறுவர். அவர்களிடம் ஞானம் மீதுர்ந்து நிற்கும்பொழுது எம்பெருமானின் திருநாமங்களைச் சொல்லியநுபவிப்பர்; அவனுடைய திவ்விய மங்கள வடிவழகை வருணித்து அநுபவிப்பர்; அவன் உகந்த திவ்விய தேசங்களின் வளங்களைப் பேசி அநுபவிப்பவர்; அவ்விடங்களில் ஆதரம் மிக்க பாகவதர்களின் பெருமைகளைப் பகர்ந்து அநுபவிப்பர். அவர்களிடம் பக்தி மீதுர்ந்து நிற்கும்பொழுது அது காதலாகக் பரிணமித்துத் தாமும் தாமான நிலையை இழந்து பிராட்டி மாருடைய தன்மையை அடைவர். அந்நிலைக் கேற்பப் பாசுரங்களும் வேற்றுவாயாலே வெளிப்படும். இந்நிலைமை களையே ஆசாரிய ஹிருதயம்”,

“ஞானத்தில் தம்பேச்சு;

பிரேமத்தில் பெண்பேச்சு’

(பிரேமம்-காதல், அன்பு)

என்று குறிப்பிடுகின்றது. ஆழ்வார்களும் ஆழ்வார் நாயகிகளாக நின்று பேசுவர்.

ஆழ்வார்கள் நாயகி நிலையிலிருந்து பேசும் பொழுது தாய் சொல்லுவதுபோலவும், தலைமகள் சொல்லுவது போலவும், தோழி சொல்லுவது போலவும் பாசுரங்கள் அமையும். இங்ஙனம் பாசுரங்கள் பலவிதமாக வெளிவந்தாலும் பாசுரங்களைப் பகர்பவர் ஆழ்வார்களேயாவர். ஒர் ஆறானது பல வாய்க்கால்களாகப் பிரிந்து சென்றாலும், அவற்றுக்கு முக்கியமான பெயர் ஒன்றேயாக இருக்குமாப்போலே, இம்மூன்று நிலைமைகளில் ‘சொல்மாலைகள் வடிவு கொண்டாலும், ‘மன்னுமா மாட மங்கையர் தலைவன்

1. திருவாய் - 10. 4:1 2. ஆசா ஹிரு - 118.