பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇடஎந்தை எம்பெருமான் 147

மானவேல் கலியன் வாயொலிகள்’ என்று ஆழ்வார் பரசுரமாகவே தலைக்கட்டும். நாயகி வாக்காக வடிவு கொள்ளும் பதிகங்களின் இறுதிப் பாசுரம் ஆழ்வார் தாமான நிலையிலிருந்து பேசுவது போலவே நிறைவுபெறும்.

இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் திருமல்லையிலிருந்து ‘திருவிடவெந்தை’ என்ற திவ்விய தேசத்திற்குப் புறப்படுகின்றோம். திருமல்லையிலிருந்து சற்றேறக்குறைய ஐந்து கல் தொலைவிலுள்ளது இத்திருப்பதி. இதுவும் கடற்கரைப் பகுதியிலுள்ளது. மாமல்லபுரத்திலிருந்து சென்னைசெல்லும் பேருந்தில் ஏறிச் சென்று இவ்வூரருகில் இறங்கி ஒரு ஃபர்லாங் தூரம் நடந்து சென்றால் திருக்கோயிலை அடையலாம். திருவிடவெந்தை மிகவும் சிறிய ஊரே, ஆனால் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளது. இந்தத் திருப்பதி எம்பெருமான் திருமங்கையாழ்வாரால் மங்காளாசாசனம் செய்யப் பெற்றுள்ளார். இந்த ஆழ்வாரைத் தவிர வேறு ஆழ்வார்கள் இத்தலத்து எம்பெருமானைப் பாடவில்லை. ஆனால் இவர் திருமங்கையாழ்வாரின் திருவுள்ளத்தை மிகவும் கவர்ந்தவராகக் காணப்பெறுகின்றார். திருமலைக்குச் சென்று ஏழுமலையானை மங்களாசாசனம் செய்யும்பொழுதும் இவர் இந்த ஆழ்வாரின் திருவுள்ளத்தில் இடம் பெற்றிருந்தமையைக் 3f66u) J ] .

‘ஏத்துவார்தம் மனத்துள் ளான்.இட வெந்தை மேவிய எம்பிரான்,

தீர்த்தநீர்த் தடம்சோலை சூழ்திரு

வேங்க டம்அடை நெஞ்சமே’

(ஏத்துவார்தம்-துதிப்பவர்களுடைய மேவிய-பொருந்திய, தடஞ்சோலை -

பெரிய சோலை)

என்ற பாசுரப்பகுதியால் இதனை அறியலாம்.

திருக்கோயிலை நோக்கி நடந்து செல்லும்போது திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் ஒன்றின்பின் ஒன்றாக நம்

சிந்தைல் எழத்தொடங்குகின்றன. இத்திருப்பதி எம்பெரு மானைப்பற்றிய பதிகம் ‘தாய்ப்பாசுரங்களாக நடைபெறு

3. பெரி. திரு. . 2.7:10 4. மேலது - 2.7. 5. பெரி. திரு. 1. 8: 4.