பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

கின்றது. இதனால் ஆழ்வாரிடம் நாயகியின் நிலை ஒரு புறத்திலும் தாயின் நிலை மற்றொரு புறத்திலும் எழுவதைக் காண்கின்றோம். பெற்றோர் அல்லது உறவினர் துணையின்றித் தானாகவே புணர்ந்து தலைவனுடைய மேம்பாட்டிலே மிகவும் ஈடுபட்டுத் தான் பிறந்த குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் ‘அவனைக் கிட்டியல்லது நான் உயிர் வாழேன்’ என்று பதற்றத்தையுடைய வளாயிருப்பவள் மகள்: பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை தக்க பருவம் எய்தினவுடன் தலைவனிடமுள்ள அன்பின் மிகுதியால் அவளிருப்பிடத்திற்குச் செல்ல வேண்டுமென்று பதறுங்கால் படிகடந்து புறப்படுதல் தான் பிறந்த குலத்தின் பெருமைக்குச் சிறிதும் பொருந்தாதென்று தடுத்து நிற்பவள் தாய். இந்த இரண்டு மனநிலைகளும் ஆழ்வார் மனத்தில் நடைபெறுவதால் எம்பெரு மானை அநுபவிப்பதில் ஆழ்வார்க்கு விரைவு உண்டானமையும், தாம் பதறக் கூடாது என்கின்ற எண்ணம் உண்டானமையும் புலனாவதை அறியலாம். அப்பெருமானுடைய வைலகூடிண் யத்தை (தனிச் சிறப்பினை) நோக்கும் பொழுது பதற்றமும், தம் சொரூபத்தை நோக்குமளவில் தாம் பதறக் கூடாது என்ற எண்ணமும் உண்டாகும். இந்த இரண்டு வகையான மனநிலை களும் பாசுரங்களில் நிழலிடுவதைக் காணலாம். இங்குத் தாய் நிலையிலுள்ளது ஆழ்வாருடைய அந்தக்கரணங்களுள் ஒன்றான ‘நெஞ்சம்’ அல்லது ‘மனம்’ என்பதையும், அவ்வந்தக் கரணங் களுள் வேறுபட்ட சீவான்மாகிய ஆழ்வார் தாமே இங்குத் ‘தலைவியாகக் கூறுப்பெற்றவர் என்பதையும் எண்ணி உணர்தல் வேண்டும்.

பரகால நாயகியைப் (திருமங்கையாழ்வாரைப்) பெற் றெடுத்த திருத்தாயார் திருவிடவெந்தைப் பெருமானிடத்தில் தன் மகள் காதல் கொண்டிருக்கின்ற நிலைமையும் அக்காதலின் அநுபவம் கைக்கூடாமையினால் அவள் பல்வேறு விகாரங்களை (மாறுபாடுகளை) அடைந்திருக்கின்ற நிலைமையையும் ஒவ் வொரு பாசுரத்திலும் ஒவ்வொருவகையாக எடுத்துரைக் கின்றாள். பின்னர் ஒவ்வொரு பாசுரத்திலும் ‘இப்படிப்பட்ட என்மகள் விஷயத்தில் நீ செய்ய நினைத்திருப்பது என்னோ? பிரானே!’ என்று வினவுகின்றாள். இங்ஙனம் இத்தலத்து எம்பெருமானிடம் ஈடுபாடுள்ள ஆழ்வார் தம்முடைய ஆராக் காதலை எடுத்துக்காட்டித் தன்னை ஏற்றருளத் திருவுள்ளமோ?

6. பெரி. திரு. 2.7