பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

இவ்விடத்தில் பராங்குசநாயகி தோழியிடத்தில் கூறுவதை யும் சிந்திக்கின்றோம்.

“பலபல ஊழிகள் ஆயிடும்;

அன்றிஓர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறுஆயிடும்;

பலபல நாள்.அன்பர் கூடிலும்

நீங்கிலும் யாம்மெலிதும்’

(ஊழிகள்-கற்பகங்கள் கூறு-பகுப்பு: அன்டர்-தலைவர்; மெலிதும் - வருந்து

கின்றோம்) தலைவரைப் பிரிந்து நிற்கும் காலம் நீண்டு தோன்றுகிறது; அவருடன் சேர்ந்து நிற்கும் காலம் மிகச்சிறிய பொழுதாகக் கழிந்து விடுகின்றது. நீங்கில் ஊழியாயிடும்; கூடில் நாழிகைக் கூறாயிடும்’ என்று மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். மேலும்,

“கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்தாள்

நெடிய கழியும் இரா”

(கொடியார்-கொடிய தலைவர்: நெடிய-நீண்டு; இரா-இரவு) என்ற திருக்குறளையும் அதற்கு, ‘காதலோடு நாம் இன்புற்ற முன்னாள்களில் குறியவாய், அவர் பிரிவாற்ற மாகின்ற இந்நாட்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்’ என்று பரிமேலழகர் கூறும் உரையையும் நினைந்து பார்க்கின்றோம்.

o

தன் மகள் வாய் வெருவுதலைப்பற்றி மேலும் தொடர்ந்து பேசுகின்றாள் திருத்தாயார். ‘ஒதிலும் உன் பேர் அன்றி மற்று ஒதாள்’ என்று குறிப்பிடுகின்றாள். ‘என் மகள் வாய் திறந்து பேசுவதே அரிது. அங்ஙனம் வாய் திறந்து பேச முற்பட்டால் ‘அம்மா, அண்ணா என்ற பேச்சே இல்லை. ‘கோவிந்தா, கோபாலா’ என்று எம்பெருமானுடைய திருநாமங்களையே சொல்லுகின்றாள் என்பது திருத்தாயார் வாக்கு. இவ்விடத்தில் ஒரு சிறு வரலாறு நினைக்கத் தக்கது: திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்த வளர்ந்து வருங்காலத்தில் ஒரு சமயம் ஒர் ஆயர்குல நங்கை இடைவிடாது கண்ணனையே சிந்தித்துக்கொண்டு ஆராக் காதலுடையவளாக இருந்தாள். அந்நிலையைக் கண்ட அவள் அன்னை அவளது சிந்தனையையே மாற்றிவிடக் கருதி தயிர்,

12. திருவிருத் - 16. 13. குறள் - 1169. 14. பெரி. திரு . 2. 7: 5.