பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇடஎந்தை எம்பெருமான் 153

நெய், பால் முதலியவற்றை விற்று வருமாறு ஏவினாள். அவளோ கண்ணபிரானையன்றி மற்றும் ஓர் தெய்வம் உளது’ என்று அறியாதவள். அன்னையின் வற்புறுத்தலுக்காகக் கூடையைத் தலையில் வைத்துக் கொண்டு தெருவில் புறப்பட்டாலும் தயிர் வாங்கலையோ தயிர்...... என்று கூவுவது இல்லை. ‘கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன்!, மாதவன் வாங்கலையோ மாதவன்!” என்று கண்ணனுடைய திருநாமங்களையே கூவிக் கொண்டு செல்வாளாம். இதே நிலையில்தான் பரகால நாயகியும் இருந்தாள்.

இன்னும் திருத்தாயார் தன்மகளைப்பற்றிப் பேசுகின்றாள்: “உளம்கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்;

உனக்கன்றி எனக்கன்பொன் றிலளால்; வளங்கணிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை

மாயனே! என்றுவாய் வெருவும்”

(உளம்-நெஞ்சு; வளம்-செழிப்பான; கணி.பழம்; பொழில்-சோலை; மாயன் - ஆச்சரியன்)


என்று குறிப்பிடுகின்றாள். ‘என் மகள் பரிபக்குவமான நெஞ்சுடையவள். ஏதாவது வாய் பேசினாலும் உன்னைப் பற்றின பேச்சு தவிர வேறொன்றையும் பேசுவதில்லை. தன்னுடைய அன்பு முழுவதையும் உன் மாட்டே காட்டுகின் றான். உன் பெயரைச் சொல்வதும் நீ உகந்தருளும் திருப்பதி களின் பெயர்களைச் சொல்வதும் தவிர வேறொன்றறியாள். ‘வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ்சோலை மாயனே!’ என்று வாய்வெருவுவதைக் காண்பாயாக’ என்கின்றாள். இத்துடன் விட்டாளா? இல்லை. இன்னும்,

“அலங்கெழு தடக்கை ஆயன்வாய் ஆம்பற்கு அழியுமால் என்உள்ளம் என்னும், புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்,

போதுமோ நீர்மலைக்கு என்னும்”

(அலம்-கலப்பை ஆம்பல்-ஆம்பல் குழல்; புலம்கெழு-மனத்தை ஈர்க்கும்: பொருநீர் - அலை எறியும், புட்குழி, நீர்மலை-இரண்டும் திவ்விய தேசங்கள்)

15. GuesCS - S. 10 : 3. 16. பெரி. திரு. 2. 7 : 7 17. மேலது 2. 7: 8.