பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்


கொண்டிருப்பது சிறப்புடையதாகும். எம்பெருமான் சந்நிதி யிலேயே அவன்மீது திருமங்கையாழ்வார் பாடியுள்ள பதிகம் முழுவதையும் மனம் உருகிப் பாடிப் பரவசப்படுகின்றோம். அடுத்து, கோமளவல்லித் தாயாரைச் சேவித்த பிறகு வடகிழக்கு மூலையில் கோயில் கொண்டு சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் திரு.அரங்கநாதனையும் திருஅரங்கநாய கியையும் சேவிக்கின்றோம். இத்தலத்து எம்பெருமான்மீதுள்ள பதிகமும் நம்மாழ்வார் திருஅரங்கநாதன் மீது அருளிச் செய்துள்ள ‘கங்குலும் பகலும்’ என்னும் திருவாய்மொழிப் பதிகமும் ஒப்புமை பெற்றுள்ளமையால் அப்பதிகத்தை இங்குள்ள அரங்கநாதன் சந்நிதியில் ஓதி உளங்கரைகின்றோம்.


இத்தலத்து எம்பெருமான் எம்பெருமாட்டியை இடக் கரத்தில் சுமந்து கொண்டிருப்பதற்குப் புராண வரலாறு ஒன்று உண்டு. சம்புத் தீவில் சரசுவதி நதிக் கரையில் குனி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்கு ஒரு கன்னிகை தோன்றினாள். முனிவர் சுவர்க்கம் புகுந்த பிறகு கன்னிகை கடுந்தவம் புரிந்தாள். நாரதமுனிவர் ஒரு நாள் அவளைச் சந்தித்துத் திருமணம் ஆதாதவளுக்குச் சுவர்க்கம் கிடைக்காது என்று தெரிவித்தார். உடனே அவள் முனிவர் குழுவை நாடி தன்னை யாராவது ஒருவர் திருமணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பார் அவளை மணம் புரிந்து கொண்டார். ஒர் ஆண்டில் அவளிடம் பெரிய பிராட்டியார் அம்சமாக 360 கன்னிகைகள் தோன்றினர். பின்னர் அவளும் துறக்கம் புகுந்தாள். முனிவர் அக்குழந்தைகளைக் காப்பாற்றும் ஆற்றலின்றிச் சம்புத் தீவிற்கு வந்த அந்தணர்கள் மூலம் திருவிடவெந்தை என்ற தலம் இருப்பதை அறிந்து குழந்தைகளுடன் அங்கு வந்தார். நாடோறும் முனிவர் வராக மூர்த்தியைச் சேவித்து வரும் நாளில் கன்னிகையருக்குத் தகுந்த கணவன்மார் கிடைக்க வேண்டுமென்று கவலையுடன் இருந்தார். பரமபதநாதன் ஒரு மாணி (பிரம்மச்சாரி) வடிவமாக அவரிடம் வந்து அக்கன்னிகையரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். நாளொன்றுக்கு ஒரு கன்னிகை வீதம் திருமணம் புரிந்த கொண்டே வந்தார். ஆண்டு இறுதி நாளில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே எல்லாக் கன்னிகையரையும் ஒன்று சேர்த்து ஒரே கன்னிகையாக்கி


27. திருவாய் - 7.2.