பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇடஎந்தைஎம்பெருமான் 157

எல்லோருக்கும் ஞானோபதேசம் செய்தார். 360 கன்னிகையரும் ஒருங்கு சேர்ந்து ஒர் உருவான படியால் வராகமூர்த்தி தாங்கிக்கொண்டிருக்கும் நாச்சியாருக்கு அகில வல்லி’ நாச்சியார் என்று திருநாமம் வழங்கலாயிற்று. ஆண்டு முடியும் அளவும் நாடோறும் திருமணம் புரிந்து கொண்டபடியால் வராக மூர்த்திக்கு நித்திய கல்யாணப் பெருமாள் என்ற மறு திருநாமமும் ஏற்பட்டது. பெருமாளுடைய திருக்கோயிலாதலால் நித்திய கல்யாணபுரி என்ற ஊருக்கு மறு பெயரும், பெரிய பிராட்டியார் அவதரித்த இடமாதலால் ஸ்ரீபுரி என்ற பெயரும், எம்பெருமான் வராக வடிவத்துடன் சேவை சாதிக்கின்ற படியால் வராகபுரி என்ற பெயரும் வழங்கலாயின. அந்த 360 கன்னிகையருள் முதல் கன்னிகையின் பெயர் கோமளவல்லி என்பது. ஆகவே, இங்குத் தனிக் கோயில் கொண்டுள்ள தாயாருக்குக் கோமளவல்லி நாச்சியார் என்ற திருநாமம் ஏற்பட்டது. பிராட்டியாரை இடப்புறம் வைத்துக்கொண்ருப்பதால் திருஇடஎந்தை என்ற பெயரால் இத் திவ்விய தேசம் வழங்கி வருகின்றது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அசுரகுல கால நல்லூர் என்றே காணப்பெறுகின்றது. இச் செய்திகளையும் அறிந்து கொள்ளுகின்றோம்.

இந்நிலையில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின்,

“நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்து கொன்று திரியும் கொடுவினையார் இன்று வெருவிட, எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் திருவிட எந்தைக்கே செறிந்து.’

(கொடுவினையார், வினைக்கு உருவகம், வெருவிட-பயந்துஒட விழுமிய - உயர்ந்த செறிந்து-நெருங்கி}

என்ற பாடல் நம் நினைவிற்கு வர அதனையும் திருக்கோயிலி லிருந்த வண்ணம் ஒதி ஓதி உளங்கரைகின்றோம். அதன்பிறகு திருக்கோயில் பிரசாதங்களைப் பெற்று எம்பெருமானிடம் பிரியா விடைபெற்றுத் திரும்புகின்றோம்.

திரும்பும் நிலையில் இத்திருக்கோயில் கல்வெட்டுகளால் சில செய்திகளை அறிந்த கொள்ளுகின்றோம். திருக்கோயில் மிகப்

28. அகிலம் - எல்லாம் ஒன்றானது.

29. நூற். திருப். அந் - 94.