பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

பழமையானது. கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுகள் பிற்காலத்துச் சோழ மன்னர்கள் காலத்தில் ஏற்பட்டவை. விஜயராஜேந்திர சோழ தேவன் காலத்தில் கி.பி. 1052 இல் இவ்வூர் பெருமாளுக்குத் தேவதான இறையிலியாகத் தரப்பெற்று. இன்றைக்கும் இவ்வூர் இத்தலத்து எம்பெருமானுக்கே சொந்தமாக உள்ளது. இவ்வூரில் பங்குனி உத்தரத்திலிருந்து ஒன்பது நாள் திருவிழா நடந்தமை, ஆவணிச் சதயம் ஈறாக ஏழு நாள் விழா நடைபெற்றமை, கும்ப ஞாயிறு முழுமையும் சிறப்பாக இருந்தமை, இங்கிருந்த கலிச்சிங்க மடத்தில் அமாவாசைதோறும் அந்தணர்கட்கு உணவு வழங்கியமை, மலையாளத்திலிருந்து யாத்திரையாக வந்த சில வணிகர்கள் தீப கைங்கரியத்துக்காகப் பொன் அளித்தமை ஆகிய இன்னோரன்ன செய்திகள் கல்வெட்டுகளால் அறியக் கிடக் கின்றன.