பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு 161

இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் “மகாபலிபுரம்’ (மாமல்லபுரம்) என்ற தலத்தை நோக்கிப் புறப்படுகின்றோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்தருளிய தொண்டை நாட்டுத் தலங்களுள் இதுவும் ஒன்று. இந்த ஊருக்குச் சென்னையிலிருந்தும் செல்லலாம்; செங்கற்பட்டிலிருந்தும் செல்லலாம். பேருந்து வசதி உண்டு. ‘கோயில் நகரமாகிய காஞ்சி யாத்திரையை முடித்துக் கொண்டு இங்கு வரலாம். காஞ்சியி லிருந்து நேர் பேருந்து வழி உள்ளது. நாம் காஞ்சியிலிருந்து பேருந்து மூலம் மாமல்லப்புரத்திற்குப் போகின்றோம்.

புராணங்களில் வரும் மகாபலியின் வரலாற்றை நாம் அறிவோம். இன்றுள்ள அந்த ஊரை மகாபலி ஆண்டு வந்தான் என்றும், பாற்கடலிலுள்ள பரந்தாமன் ‘ஆலமர் வித்தின் அருங்குறளாகி அவனை ஆட்கொண்டான் என்றும், அவன் தலையில் தன் காலை வைத்துப் பாதாளத்தில் அமிழ்த்தின பொழுது தான் இருந்து அரசாண்ட இடம் தன் பெயராலேயே வழங்குமாறு வேண்டிக் கொண்டான் என்றும், பரந்தாமனும் மாபலியின் விருப்பத்தை நிறைவேற்றினான் என்றும் அதனால் அவ்வூருக்கு ‘மகாபலிபுரம்’ என்று பெயர் வழங்கி வருகின்றது என்றும் ஒரு செவிவழி வரலாறு வழங்கி வருகின்றது. அத்தலத்திலுள்ள வழிகாட்டிகளும் (Guides) இதையேதான் சொல்லி வருகின்றனர். இது சரியன்று. பல்லவ மன்னர்களில் மகேந்திரவர்மன் பெரும் புகழ் பெற்றவன்; சிற்பக்கலையில் அளவற்ற காதல் கொண்டவன். ஆதலால் அவன் ‘சித்திரகாரப் புலி’ என்ற பட்டப்பெயராலும் வழங்கப்பெற்று வருகின்றான். அவனுடைய மகன் நரசிம்மவர்மனோ தந்தையையும் மிஞ்சியவனாகிச் சிற்பிகளை ஆதரித்த ஒரு கலைவள்ளல். மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக் கினவன் தந்தை என்றால், மலைகளையே வெட்டிச் செதுக்கிக் கோயில்கள், விகாரங்கள், இரதங்கள் முதலியவற்றையெல்லாம் நிர்மாணித்தவன் மைந்தன். இன்று நாம் மாமல்லபுரத்தில் கண்ணுக்கெட்டியவரை காணும் கலைக்கூடத்தை உருவாக்கி யவன் இந்த நரசிம்மனே ஆவான். சிற்பக்கலை வல்ல நரசிம்மவர்மன் மற்போர்க் கலையிலும் வல்லவன். போரில் பெரிய பெரிய மல்லவர்களையெல்லாம் மண்ணைக் கவ்வச்செய்து ‘மாமல்லன்’ என்ற விருதுப் பெயரையும்

தொ.நா-11