பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு 163

நிலையிரும் எழுந்தருளியிருப்பான் என்பதை நாம் அறிவோம். இவற்றைப் பொய்கையாழ்வார்,

“வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்றநகரும் நான்குஇடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடர்.”

(வேங்கடம்-திருமலை; விண் நகர்-வைகுந்தம், வெஃகா-காஞ்சி சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்; கோவல்-திருக்கோவல்) என்று குறிப்பிடுவதால் அறியலாம். இவற்றுள் அவனது சயனத் திருக்கோலமே கண்டோர் மனத்தைக் கவரத்தக்கது. இந்தச் சயனத்திருக் கோலத்திலும் பலவகை உண்டு. 108 திவ்விய தேசங்களில் அவர் கிட்டத்தட்ட இருபதில் அநந்தன்மீது சயனம் கொண்டுள்ளார். இதனைப் புயங்க சனம் (பாம்பனைப் படுக்கை) என்று வழங்குவர். ஏனைய இடங்களில் உள்ளவை உத்தியோக சயனம், தர்ப்ப சயனம் (புல்படுக்கை), போக சயனம், (இன்பப்படுக்கை), மாணிக்க சயனம், வடபத்திர சயனம் (ஆலிலைப் படுக்கை), வீர சயனம் என்பவையாகும்.

மாமல்லபுரத்தில் எம்பெருமான் கொண்டுள்ள திருக் கோலம் மேற்கூறிய வகையுள் ஒன்றிலும் அடங்காது. இங்கு வெறும் தரையில் படுத்துக்கிடக்கின்றான் இறைவன். படுக்காப்பாயும் இன்றி, தலைக்கும் அணையும் இன்றித்தரையில் கிடக்கின்றான். இதனைத் தலசயனம்’ என்றே வழங்குகின்றனர். இவர் தரையில் எழுந்தருளியிருக்க நேர்ந்ததற்குப் புராண வரலாறு ஒன்றுண்டு. புண்டரீகர் என்பவர் ஒரு முனிவர்; திருமாலிடம் அளவற்ற பக்தியுடையார். கடற்கரையில் ஒரு பெரிய பூங்கா வனத்தை ஏற்படுத்தி அதில் சிறந்த மலர்களை விளைவிக்கின்றார். அம்மலர்களைப் பாற்கடலில் பாயல் கொண்டுள்ள பரந்தாமனின் திருவடியில் சேர்க்க வேண்டும் என்று பாரிக்கின்றார். பாற்கடலை அடைவற்கு இடையிலுள்ள கருங்கடலைக் கடக்க வேண்டும். அக்கடல் நீரைக் கையால் இறைத்து வற்ற அடிக்க முயல்கின்றார் முனிவர். செயல் துரிதமாக நடைபெறுகின்றது. பரந்தாமன் பக்தனின் அன்பின் மிகுதியைக் கண்டு வியந்து உவந்து முதியவர் வடிவத்தில் அவர் முன்னே வந்து தனக்குச் சிறிது உணவும் நீரும் கூலியாகத் தரின்

3. முத.திருவந் 77.