பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

ஆயினும் பிரமன், இந்திரன், சிவன், சந்திரன் முதலிய தெய்வங்கள் யாவும் நாராயணனே என்று சாத்திரங்களில் பலவிடங்களில் ஒதப்பெற்றுள்ளது. இவ்விடங்களில் பிரமன் முதலிய தெய்வங்ளைச் சரீர மாகக்கொண்ட சர்வ சரீரியான நாராயணன் ஒருவனே என்பதாகக் கொள்ள வேண்டும். அஃதாவது, தெய்வங்கள் பலவுள்ளனவாகச் சொல்லப் பெற்றுள்ள இடங்களிலெல்லாம் சர்வ சரீரியான நாராயணனிற் காட்டிலும் சரீரங்களான தெய்வங்களுக்கு உள்ள ஸ்வரூப பேதம் (வடிவின் வேற்றுமை) சொல்லப் பெறுவதாகக் கொள்ள வேண்டும். படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய செயல்கள் நடைபெறுவதற்காகவே இங்ஙனம் நான்முகன் முதலிய தெய்வங்கள் தனிப்பட நிறுத்திக் காட்டப் பெற்றுள்ளன. ‘உலகுய்ய என்ற தொடர் இதனை விளக்குகின்றது.

“வரைமீகானில் தடம்பருகு கருமுகிலை என்பதற்கு நஞ்சீயர் பொருள் கூறிக்கொண்டிருக்கும் போது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் என்பவர் பராசரபட்டர் அருளிச் செய்த வேறு பொருளை அவரிடம் சம்ர்பித்ததாக நாம் அறிகின்றோம். அப்பொருள்: கண்ணன் மலைமீதுள்ள காடுகளில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, இளங்கன்றுகள் அங்குள்ள தடாகங் களில் நீர் குடிக்கப் புகும்போது நீரில் முன்னே இறங்கிக் குடிக்க அஞ்சுமாம். அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப் பதற்காகக் கண்ணன் தன்முதுகில் கைகளைக் கட்டிக்கொண்டு கவிழ்த்து நின்று தண்ணிரமுது செய்து காட்டுவானாம். மேற் காட்டிய சொற்றொடர் கண்ணனுடைய இச்செயலைக் குறிப் பிடுகின்றது என்பாராம் பட்டர். பாசுரத்தை அநுபவித்த பட்டரின் திறனை நாம் எண்ணி எண்ணிப் போற்றுகின்றோம்.

தலசயனரை மங்களாசாசனம் செய்து கொண்டிருக்கும் போதே தஞ்சை மாமணிக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆழ்வாரின் திருவுள்ளத்தில் முகங்காட்டுகின்றான். அவன் ஆழ்வாருக்கு தவநெறிக்கோர் பெரு நெறியாகத் தோற்றுகின்றான். எம்பெருமானைப் பெறுவதற்குக் கரும யோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய வழிகள் விதிக்கப் பெற்றிருப்பினும், யானையின்மீது ஏற நினைப்பார்க்கு யானையின் காலைப் பற்றியே ஏற வேண்டுவதுபோல்