பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக்கிடக்கும் கரும்பு 167

எம்பெருமானுடைய திருவடியைப் பற்றியே அவனைப் பெறுதல் சிறக்கும் என்பது அடியார்களின் கொள்கை. இதுவே, ‘சித்தோபாயம் (முன்னமே உள்ள உபாயம்) எனப்படும். ‘தவநெறியாக இருக்கும் அவனை அடைவதற்கு அவனே ஒரு ‘பெருநெறியாக அமைகின்றான் என்பது கருத்து.

கண்ணனாக அவதரித்து நிறைவேற்றின திருவிளையாடல் களையே அதிகமாக இத்தலத்து எம்பெருமானின் செயல்களாகப் பேசுகின்றார் ஆழ்வார். ஆழ்கடலில் தோன்றின அமுதத்திற்கு நிகரான எம்பெருமான் குதிரைவடிவாக வந்த கேசி என்னும் அசுரனது வாயைக் கிழித்தெறிந்து அவனைக் கொன்றவன்; கம்சனது குவலயாபீடமென்ற யானையின் கொம்புகளைப் பறித்து முறித்தெறிந்தவன்; இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்து அவற்றை முறித்தெரிந்தவன்; அர்ச்சுனனைக் கருவியாகக் கொண்டு காண்டவவனத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தவன்; நஞ்சு தடவப் பெற்ற முலையுடன் பாலூட்ட வந்த பூதனையிடம் பாலுண்டு அவளது உயிரையும் குடித்த வித்தகன், கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் கல்மாரி தடுத்தவன்; ஆயர்பாடியில் சேமித்து வைத்திருந்த தயிர் வெண்ணெய் அனைத்தையும் அமுது செய்து களித்தவன்; இடைப் பெண்களோடு குரவைக் கூத்து ஆடியவன். அடுக்கின குடங்களைக்கொண்டு குடக்கூத்து ஆடியவன்; குழவிப் பருவத்தில் உருளுகின்ற சகடத்தில் ஆவேசித்துப் புகுந்துவந்த அசுரனைத் திருவடியால் உதைத்துக் கொன்றவன்; பாண்டவர் கட்காகத் துது சென்றவன்; பொய்யாசனம் இடுவித்து நிலவரையில் நிறுத்திவைத்த மல்லர்கள் யாவரையும் ஒருசேரக் கொன்றொழித்த மாவீரன்.

இந்த எம்பெருமானைப் பல்வேறு விதமாக உருவகப்படுத்திப் பேசி மகிழ்கின்றார் ஆழ்வார். பவளத் துண்”, தொண்டர்களின் சிந்தையில் முளைத்து எழுந்த திங்கரும்பு, போர் ஏறு, பொற்குன்று, கற்பகம், கருமுகில், நித்திலம், அமுதம் என்றெல்லாம் எம்பெருமானை உருவகப்படுத்தி அவனை அநுபவித்து இனியராகின்றார், சதாயோகியர்களால் சிந்திக்கப் பெறுபவன் என்றும், உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றவன்

6. துரணானது எப்படிப் பெருத்த பாரங்களைத் தாங்கி நிற்கின்றதோ அப்படியே பக்தர்களின் நலன்களைத் தாங்கிக் கொண்டிருப்பவன் எம்பெருமான்.