பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

என்றும், அரவிந்தம் போன்று கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஒடி நீண்ட அப்பெரியவாய கண்களையுடையவன்’ என்றும் சொல்லிச் சொல்லி இன்புறுகின்றார் ஆழ்வார். இங்ஙனம் மங்களா சாசனம் செய்த பாசுரங்கள் பத்தையும் அவன் சந்நிதியிலேயே பாடிப் பக்திபரவசமாகின்றோம்.

“படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர் கோனைப்

படவெகுண்டு மருதுஇடைப்போய்ப் பழனவேலி தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்

தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன் தன்னை கடமாரும் கருங்களிறு வல்லான் வெல்போர்க்

கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் திடமாக வினவஐந்தும் ஐந்தும் வல்லார்

தீவினையே முதலரிய வல்லார் தாமே.”

(அணை-படுக்கை, அவுணர்கோன்-இரணியன்; பழனம்-வயல்; தடம்-குளம்; கடம்ஆரும் மதம்மிக்க கலிகன்றி-திருமங்கையாழ்வார்; திடமாக-உறுதியாக; முதல் - வேர்)

என்ற பாசுரத்தில் கூறப்பெற்றுள்ள பலனை அடைந்த உணர்ச்சி யையும் பெறுகின்றோம்.

இங்ஙனம் திருமங்கையாழ்வார் போற்றிப் பாடிய ‘மன்னும் கடல்மல்லை மாயவனைத்” தொழுதேத்தித் திருக்கோயிலி னின்றும் வெளிவருகின்றோம். பல்லவமன்னன் அமைத்த கலைச் செல்வங்களைக் கண்டு களிக்கும் எண்ணத்துடன் மேற்கு நோக்கி நடைகட்டுகின்றோம். முதலில் நம் கண்ணில் படுவது கிருஷ்ண மண்டபம். அங்குக் குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவனின்’ சிற்பத்தைக் காண்கின்றோம். அச்சிற்பத்தில் காணப்பெறும் கண்ணன் சிறிய வயதுடைய சின்னப்பையனாக இல்லை; எட்டடிக்குமேல் உயர்ந்து வளர்ந்தவன். அந்தச் சிற்பத்தைக் கண்டு களிக்கின்ற நிலையில் பால் கறக்கும் நிலையிலிருக்கும் கோபாலனின் சிற்பம் நம் கண்ணிற்குத் தட்டுப்படுகின்றது. அந்த இடையன் இன்றைய காலத்து மனிதனைப் போலக் காணப்பெறுகின்றான். ‘ நாம் வருகின்றோம்’ என்று நம்மைத் திரும்பிப் பார்ப்பது போல் தோற்றம் அளிக்கின்றான். இச்சிற்பம் மிகப் பெரிய பாறையில்

7. பெரி. திரு . 2. 5. 8. பெரி. திரு. 2. 5. 10 9. பெரிய, திருமடல் - கண்ணி - 120. 10. திருவாய் - 3, 3 : 8.