பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக்கிடக்கும் கரும்பு 174

“ வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர்

மல்லையாய்!’

(வங்கம்-கப்பல்; மாமணி-இரத்தினங்கள்; உந்து-தள்ளும்; முந்நீர்-கடல்)

என்று ஆழ்வார் குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.

கலங்கரை விளக்கத்தைச் சுற்றிப் பார்க்கும் பொழுது சில வரலாற்றுக் குறிப்புகள் நம் மனத்தில் குமிழியிடத் தொடங்கு கின்றன. தாலமி என்ற மேனாட்டு யாத்திரிகன் இந்தியாவின் தென் கரையில் மாலியார்பா என்ற துறைமுகம் இருந்ததாகக் குறிப் பிடுவது இந்த மாமல்லையாகத்தான் இருக்க வேண்டும். ஹியான் - சுவாங் என்ற சீன யாத்திரிகள் காஞ்சிபுரத்தைக் குறிப்பிடுங்கால் அது தென்கடற்கரை வரை நாற்பது மைல் தொலைவிற்குப் பரவிச் சிங்கள நாட்டை நோக்கியுள்ளது என்கின்றான். அவன் குறிக்கும் தென் கடற்கரைப் பட்டினமும் இந்த மாமல்லை யாகத்தான் இருக்க வேண்டும்.

“நிர்பெயற்று எல்லைப் போகி பாற்கேழ் வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை”

(நீர்பெயற்று எல்லை-நீர்ப்பாயல் துறை என்னும் ஊர்; பால்கேழ் - பால்போன்ற, வால்உளை-வெண்மையான பிடரி மயிர்; நாவாய் - மரக்கலம்; படப்பை கடல்பக்கம்)

என்று தென் கரையில் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஒன்றைக் குறிப்பிடுகின்றது பெரும் பாணாற்றுப்படை. தொண்டைமான் இளந்திரையனுடைய நாட்டின் பல பகுதிகளைக் கூறிக்கொண்டு வருங்கால் கடற்கரைப் பட்டினமொன்றில் பண்டங்களும் புரவிகளும் மரக்கலங்களில் வந்திறங்குவதைப்பற்றிக் கூறு கின்றார் பெரும் பாணாற்றுப்படை ஆசிரியர்கடியலூர் உருத்திரங் கண்ணனார். தொண்டைமான் இளந்திரையனுடைய ஊராகிய காஞ்சிக்கு அருகிலுள்ள மல்லையையே நீர்ப் பாயல் துறை’ என்று அந்த ஆசிரியர் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

கலங்கரை விளக்கத்தைவிட்டு இறங்கி இன்னும் சற்று மேற்குப் பக்கமாகச் செல்லும்பொழுது வராக மூர்த்தியின் ஆலயம் ஒன்றைக் காண்கின்றோம். இஃது ஒரு குகைக்கோயில். இந்தக் கோயிலில் பூசை முதலியன நடைபெறுகின்றன. இங்கு

13. திருநெடுந் 9. 14. பெரும் பாண் - அடி - (3.19-2)