பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஞானப்பிரான் என்ற திருநாமத்தையுடையவர். இவரைத் திருமங்கையாழ்வார்,

“ஏனத்தின் உருவாகி

நிலமங்கை எழில்கொண்டான் வானத்தில் அவர்முறையால்

மகிழ்ந்துவத்தி வலங்கொள்ள, கானத்தின் கடல்மல்லைத்

தலசயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளிஉருவை

நினைவார்என் நயகரே.”

(ஏனம்-வராகம்; நிலமங்கை-பூமிப் பிராட்டியார், எழில்-அழகு; வானத்தில் அவர் தேவர்கள்; ஏத்தி-துதித்து; கானம்-காடு; நாயகர்-தலைவர்)

என்று மங்களாசாசனம் செய்து மகிழ்கின்றார். அந்தப் பாசுரத்தையே நாமும் பக்தியுணர்ச்சியுடன் பாடி அவர் பெற்ற உணர்ச்சியையே பெற முயல்கின்றோம். வராகப் பெருமானுக்கு “ஞானப் பிரான் என்று திருநாமம் வழங்குதல் வைணவ சம்பிரதாயம். அது தோன்றவே பாசுரத்தில் ஞானத்தின் ஒளிஉரு’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. நம்மாழ்வாரும் ‘ஏனத்துருவாய் இடந்த பிரான்........ ஞானப் பிரான்’ என்று அருளியுள்ளது ஈண்டு நினைக்கத் தக்கது.

திருமால் வராக அவதாரமாக வந்த காலத்தில் நெடுங்காலம் காட்டில் விளையாடிப் பொழுது போக்கினதாகப் புராண வரலாறு உண்டு. இதனைத் திருவுள்ளத்தில் கொண்டே,

“வானத் தெழுந்த மழைமுகில் போல், எங்கும்

கானத்து மேய்ந்து களித்து விளையாடி

ஏனத்து உருவாய் இடந்தஎம் மண்ணினை

தானத்தே வைத்தான்’

(வானம்-ஆகாயம்; முகில்-மேகம்; கானம்-காடு; இடந்த-கோட்டால் குத்தி

எடுத்த மண்-பூமி, தானத்து.அதன் இருப்பிடத்தில்)

என்று பெரியாழ்வாரும் அருளிச் செய்துள்ளமை ஈண்டு எண்ணி மகிழத் தக்கது.

15. பெரி.திரு.2.6:3 16. திருவிருத் 99. 17. பெரியாழ். திரு . 2.10 :9