பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு 179

அமைந்துள்ள இயற்கைச் சூழலைத் துய்த்த வண்ணம் திருக்கோயிலை நோக்கிப் போகின்றோம்.

பேருந்து திரு அயிந்திரபுரத்தை நோக்கிச் செல்லுங்கால் சாலையின் இருபுறமும் நெருங்கி நிற்கும் மரவரிசைகள், பச்சைப்பட்டு விரித்தாலெனப் பரந்து கிடக்கும் நெல் வயல்கள், இங்கும் அங்குமாகத் திகழும் சிறு சிறு தோப்புகள், பூங்கொத்துகள் குலாவும் குளிர் சோலைகள், வலைப்பின்னல் போல் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து செல்லும் கால்வாய்கள் இவற்றைக் கண்டுகளித்துக் கொண்டே செல்லுகின்றோம். திருப்பாதிரிப் புலியூரிலிருந்து திரு அயிந்திரபுரம் வரையில் இதே சூழ்நிலைதான். சித்தும் அசித்தும் எம்பெருமானுடைய திரு மேனியாக அமைந்துள்ள தத்துவ உண்மையினைச் சிந்திக்கின் றோம். ஆழ்வார்கள் பாசுரங்களில் வரும் இயற்கைய வருணனை களைப் படிக்கும்போது இந்த உண்மை நம் நினைவில் எழுகின்றது. அசித்தினைச் தொழுதாலே எம்பெருமானின் திருமேனியைத் தொழுதலுக்குச் சமமாகும் என்று நினைந்தே ஆழ்வார்கள்,

‘வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே! வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை.”

(வினைச்சுடர்-தீவினையாகிய நெருப்பு: நந்துவிக்கும்-அணைக்கும்; மனச்சுடர்-இதயமாகிய விளக்கு.) என்றும்

‘மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலைப் பதியது ஏத்தி எழுவது பயனே’

(குடுமி-சிகரம்; பதி-ஊர்; ஏத்தி-தொழுது.) என்றும்,

‘திருவேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்விணை ஒயுமே” என்றும் கூறியுள்ளனரோ என்று எண்ணுகிறோம்.

இங்ஙனம் சிந்தித்த வண்ணம், “வையம் ஏழும்.உண்டு ஆல்இலை வைகிய

மாயவன, அடியவாககு மெய்யன் ஆகிய தெய்வநாயகன்இடம்

மெய்தரு வரைச்சாரல்’

4. முத. திருவந் - 26 5. திருவாய் . 2. 10 : 2 6. மேலது - 3. 3. . 8 7. பெரி. திரு . 3, 1 : 3.