பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

(வையம்-உலகம்; வைகிய-தங்கிய; வரைச்சாரல்-மலைச்சாரல்)

என்று திருமங்கையாழ்வார் போற்றும் திருக்கோயிலை அடைகின்றோம். ஆழ்வார் கூறியுள்ளவாறு திருக்கோயில் ஒரு சிறு மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இந்தத் திருக்கோயில் எம்பெருமானைத் திருமங்கையாழ்வார் மட்டிலுமே ஒரு பதிகத்தால் மங்களா சாசனம் செய்துள்ளார். ஆழ்வாரின் பாசுரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நம் மனத்தில் எழுகின்றன.

“இருந்தண் மாநிலம் ஏனம் அதுஆய்வனை

மருப்பினில் அகத்துஒடுக்கி கருந்தண் மாகடல் கண்துயின் றவன்இடம்

கமலநல் மலர்த்தேறல் அருந்தி இன்இசை முரன்றுஎழும் அளிகுலம்

பொதுளிஅம் பொழிலுடே செருந்தி நாள்மலர் சென்று, அணைந்து உழிதரு

திருவயிந்திர புரமே.”

(இருதண்-மிகக் குறைந்த, ஏனம்-பன்றி; வளை மருப்பு-வளைந்த கோரப்பல்: ஒடுக்கி அடக்கி, அம்பொழில்-அழகிய சோலை; கமலம்-தாமரை தேறல் - தேன் ; முரன்று -பாடிக்கொண்டு; அளிகுலம்-வண்டுக் கூட்டங்கள்; பொதுளி - நெருங்கி; செருந்தி -சுரபுன்னை; அணைந்து-சேர்ந்து, உழிதரு - சஞ்சரிக்கப்

பெற்ற)

என்பது முதல்பாசுரம். இதில் முதல் இரண்டடிகளில் திவ்விய தேசத்து எம்பெருமானின் சிறப்பும், பின் இரண்டடிகளில் திவ்விய தேசத்தின் சிறப்பும் கூறப் பெறுகின்றன. பாசுரந்தோறும் இங்ஙனமே அமைந்துள்ளது. திவ்விய தேசமாகிய திருமேனியில் எம்பெருமானாகிய பரமான்மா அமைந்திருப்பதுபோல் நமக்குத் தோற்றுகின்றது.

இப்பாசுரத்தின் பொருளில் நம் மனம் ஆழங்கால்படு கின்றது. கோலவராகமாகி பூமிப் பிராட்டியை மீட்டுக் கொணர்ந்தவனும், பாலாழியில் திருக்கண் வளர்ந்தருள் பவனுடைய எம்பெருமான் கோயில் கொண்டருளிய இடம் திருவயிந்திரபுரம். அவனோ ‘உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனாக’ இருப்பவன். அவன் உறையும் இடம் சோலைகள் சூழ்ந்தது. அச்சோலைகளில் திரள் திரளாக வண்டுகள் புகுந்து மதுவைப் பருகிக் களித்து

8. மேலது - 3.1 9. மேலது -3.1:1 10. பெரி. திரு . 4. 3 : 9