பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவயிந்திரபுரத்துத் தெய்வநாயகன் 181

அக்களிப்புக்குப் போக்கு வீடாக இன்னிசைகளைப் பாடிக் கொண்டு உலாவுகின்றன. அங்ஙனம் உலாவுங்கால் செறியப் பூத்த சுரபுன்னை மரங்கள் எதிர்ப்படுகின்றன. அவற்றிலும் மதுவைப் பருகச் சொல்கின்றன. அவ்வண்டின் குழாங்கள்.

இப்பாசுரத்தில் வரும் ‘வண்டு என்பதன் உள்ளுறைப் பொருளில் நம் மனம் ஈடுபடுகின்றது. வண்டுகட்கு ‘மது விரதம்’ என்ற ஒரு திருப்பெயர் உண்டு. தேனைத் தவிர வேறொன் றையும் உணவாகக் கொள்ளாதது என்பது இதன் பொருள். இது போன்ற தன்மையர் அடியார்கள்(பாகவதர்கள்) ஆதலின் உளம் கனிந்திருக்கும் அடியவர்’ என்று சிறப்பிக்கப் பெற்றனர். மேல் நோக்கிய வழிக்குச் செல்லக் கருவியாகப் பயன்படும் இரண்டு சிறகுகள் போன்றவை ஞான அநுட்டானங்கள். இதனால் வண்டுகளைப் பாகவதர்களாகச் சொல்லுவது வைணவமரபு.’ அத்தகைய பாகவதர்கள் பகவத் பாகவத போக்கியதைகளை அநுபவித்த ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக நாரத முனிவர், திருப்பாணாழ்வார், தம்பிரான்மார் (அரையர்) முதலானோரைப் போல ‘பண்கொள்தலைக்கொள்ளப் பாடிப் பறந்தும் குனிந்தும் உழல்வர்; இந்த நிலையை ‘இன்னிசை முரன்று எழும்’ என்ற சொற்றெடர் குறிப்பிடுகின்றது. பகவத் பாகவத குணாது பவத்திற்கு வாய்த்த இடங்கள் பொழில்’ எனப்படும். ‘செருந்தி’ என்ற சுரபுன்னை மரத்தைக் குறித்ததன் தாற்பரியத்தையும் நம் மனம் எண்ணுகின்றது. ‘தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் - தனதாள் நிழலே’ என்று ஆழ்வார் குறிப்பிட்டவாறு சம்சார மாகிய கொடிய வெய்யலிலே தபிக்கப் பெற்றவர்கட்கு நிழல் தந்து விடாய் தீர்க்கும் நன் மரமாகிய எம்பெருமானின் கழலிணைகளில் சேர்ந்திருக்கும் இருப்பே ‘செருந்தி’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, சாரத்தை அறிந்தவர் களாகிய (ஸாரக்ராஹிகள்) பாகவதர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்ட பகவத் பாகவத குணாதுபவக் களிப்பாலே எம்பெருமானைப் பற்றிய இசைப்பாடல்களை - அழ்வார்களின் பண்ணார்ந்த பாடல்களைப் - பாடிக் கொண்டு எம்பெருமானின் திருவடிப் பேற்றினையே நினைந்துகொண்டு வாழும் இடம் திருவயிந்திர புரம் ஆகும். ‘அஹிந்த்ரபுரம்’ என்ற வடசொல் ‘அயிந்திரபுரம்’

11. ஆசா. ஹிரு - 152 12. பெரி. திரு . 3.5:2 13. மேலது 6. 3: 9