பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவயிந்திரபுரத்துத் தெய்வ நாயகன் 183

இவற்றின் வாழ்வு மேலும் இனிதாகும்பொருட்டு செந்நெல் நிறைந்த கதிர்கள் சாமரம் வீசி நிற்கின்றன.’

பிறிதொரு கோணத்தில் சூழ்நிலையின் காட்சி இது: நெருங்கிய குருக்கத்திச் செடிகளோடும் சண்பக மரங்களோடும் தழுவி நிற்கின்றன முல்லைக் கொடிகள். அங்குள்ள வயல்களில் செந்தாமரைப் பூக்கள் செழித்த வளர்ந்து காணப்பெறுகின்றன. வயல்களில் இன்றொரு பக்கத்தில் மெல்லிய கரும்பின் இளந்தடிகள் ஓங்கி வளர்நது காணப்பெறுகின்றன. வயல்களின் பிறிதொரு புறம் கருப்பஞ்சாற்றின் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேறு காணப்பெறுகின்றது”. அன்று கரும்புகளின் இருப்பு இருந்ததைப் போன்று இன்றும் அப்பகுதிகளில் கரும்பு மலிந்து காணப்பெறுகின்றது. இதனால்தான் அருகிலுள்ள நெல்லிக் குப்பத்தில் சருக்கரை ஆலை நிறுவப்பெற்றுள்ளது என்பதையும் அறிகின்றோம். கடலூர் - விழுப்புரம் பாதையில் இருப்பூர்தியில் செல்வோர் சரூக்கரை ஆலையினின்றும் கிளம்பி வரும் சருக்கரைப் பாகின் மணத்தை நுகரலாம்.

மற்றொரு கோணத்தில் காணும் சூழ்நிலை இது: வானில் சஞ்சரிக்கும் சந்திரன் தவழப்பெறும் ஓங்கி உயர்ந்த பெரிய மலையும் பெரிய மதிளும் சூழ்ந்திருக்கப்பெற்றது இத்தலம். இந்த மலையில் வண்டுகள் இசைபாடும் சோலைகள் நிரம்ப உள்ளன.” சோலையில் குரங்குகள் புரியும் சிறு குறும்புகள் கூறுப்பெறுகின்றன.

‘பொன்மலர்திகழ் வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினினல் குதிகொடு

குரக்கினம் இரைத்தோடி தேன்கலந்ததண் பலங்கனி நுகர்தரு

திருவயிந்திர பரமே’

(பொன்மலர்-பொன்நிறமான பூக்கள்; கொம்பு-கினை; தண்பலங்கனி-சிறந்த

பலாப்பழம்; நுகர்தரு-உட்கொள்ளப்பெற்ற)

என்பது இச்சிறுகுறும்புகளைக் காட்டும் பாசுரப்பகுதி. வேங்கைமரம், கோங்குமரம், சண்பகமரம் ஆகியவற்றின்

16. பெரி.திரு.3.1:7 17. மேலது. 3.1.6 18. மேலது. 3.1:4 19. மேலது.3.1.:5