பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர்த் தீங்கரும்பு 491

இறைவனுடைய உடலை வைணவர்கள்'திவ்விய மங்கள விக்கிரகம்’ என்று பாராட்டிப் பேசுவர். அஃது எல்லையற்ற பேரொளியினைக் கொண்டதாய், கண்டாரை ஈர்க்கும் தன் மையதாய், செளகுமார்யம் (மிருதுத் தன்மை), அழகு முதலிய மங்கள குணக் கூட்டங்கட்குக் கொள்கலமாய் இருப்பதாகக் கொள்வர் அவர்கள். அசித்தை எம்பெருமான் உடலாகக் கொண்டிருப்பதால், எங்கெங்கெல்லாம் அழகு கொழிக் கின்றதோ அங்கங்கெல்லாம் இறைவன் திருக்கோயில் கொண்டிருப்பான் என்று கருதித் தமிழர்கள் இறைவனுக்குக் கோயில் எடுத்து வழிப்பட்டனர் என்று கூடக் கருத இடம் உண்டு. பெரும்பாலும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து வழிபட்ட 108 எம்பெருமான்களும் அழகு தவழும் இடங்களிலேயே திருக்கோயில் கொண்டு சீவான்மாக்கள் கடைத்தோறும் கருத்துடன் அவர்களிடம் கருணை வெள்ளமிட்டோடச் செய்கின்றனர். இத்தகைய திருப்பதிகளுள் நடுநாட்டைச் சார்ந்த திருக்கோவலூர் என்ற திவ்விய தேசமும் ஒன்றாகும்.

தென்னிந்திய இருப்பூர்தி வழியில், விழுப்புரம் காட்டுப்பாடி வழியில், விழுப்புரத்திலிருந்து சற்றேறக்குறைய இருபத்தைந்து கல் தொலைவிலுள்ளது இத்திருப்பதி. விழுப் புரத்தில் தங்கி, அதிகாலையில் நான்கு மணிக்கு நன்னிராடித் துய ஆடைகளை உடுத்திக் கொண்டு புறப்படுகின்றோம்; அதி காலையில் ஐந்து மணிக்கு வண்டி புறப்படுகின்றது. திருவண்ணா மலையில் தங்குபவர்கள் திருவண்ணாமலையிருந்து பேருந்து மூலமாகப் புறப்படலாம். நேராக ஊருக்குள்ளேயே இறங்கலாம். அருகிலுள்ள அரகண்டநல்லூர் இருப்பூர்தி நிலையத்தில் இறங்கும் நாம் சுமார் இரண்டு கல் தொலைவினைக் கடந்து திருக்கோவலூரை அடைதல் வேண்டும். திருக்கோவலூர் ஒரு சிற்றுரே. எனினும், அதில் மேலுர், கீழுர் என்ற இருபகுதிகள் உள்ளன. இரண்டு ஊர்களும் ஆற்றின் தென்கரையில் உள்ளன. ஆற்றையொட்டியிருப்பது கீழுர். கீழுரில் தென் பெண்ணை யாற்றங்கரையில் வீரட்டானேச்சவரம் என்ற ஒரு பெரிய சிவன்

1. தேசி. பிரபந் - 40.

2. திருவாய் - 1. 1: 7