பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

என்ற பாசுரப் பகுதியால் அறியலாம். அவர்கள் வாழும் வீடுகள் தோறும் மறையொலி ஓங்கி நிற்கும்; புகழ் மணம் வீசும்; தெருக்களிலுள்ள மண்டபங்களிலெல்லாம் வாரம் ஒதுகை’ என்று வழங்கும் வேதபாராயணம் நடைபெறும். இவற்றை,

‘மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும்

மண்டபம்ஒண் தொளிஅனைத்தும் வாரம் ஒத

(ஒண்தொளி-அழகிய விதி)

என்று ஆழ்வார் குறிப்பிடுவர். மேலும், அந்தணர்கள் ஒரு பலனையும் விரும்பாமல் மனத்துய்மையுடன் சோமயாகங் களைச் செய்கின்றனர் என்பதும், அக்காரணத்தால் நெற்பயிர்கள் செழித்து வளர்கின்றன என்பதும்,

“தூயநான் மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூர்’

(சோமு.சோமயாகம்; செஞ்சாலி.நெற்பயிர்)

என்ற ஆழ்வாரின் பாசுரப்பகுதியால் அறியலாகும் செய்திகள். திருநெடுந்தாண்டகத்திலும்,

‘கடிபொழில்சூழ் நெடுமறுகில்

கமல வேலி’

(கடி-மனம்; நெடுமறுகு-அகன்ற தெரு, கமலவேலி-தாமரைத் தடாகங்கள் சுற்றிலும் உள்ள)

என்று இத்தருப்பதியின் நறுமணம் மிக்க சோலைகளையும், நீண்டு அகன்ற வீதிகளையும், ஊருக்கென்று வேலிபோல் அமைந்த தாமரைத் தடாகங்களையும் ஆழ்வார் சுட்டியுரைப்பர்.

திவ்வியப் பிரபந்தம் முதன்முதலாகத் தோன்றியது திருக்கோவலூரில்தான். முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி தொடுத்த தலம் இதுவேயாகும். இதுதான் வரலாறு: ஒரு சமயம் மாலை நேரத்தில், பொழுது சாயும் சமயத்தில், வானம் திடீரென்று இருண்டது; அந்த இருள்

14. மேலது - 2. 10 : 5 15. மேலது. 2. 10 : 1.

16. திருநெடு. 7.