பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர்த்தீங்கரும்பு 197

உலகத்தைக் கருந்திரையிட்டு மறைத்தது. அத்துடன் நல்ல மழையும் பொழிந்தது. மழையில் நனைந்து கொண்டே வந்த பெரியார் ஒருவர் ஒரு வீட்டில் மழைக்காக ஒதுங்கவும், இரவு நேரத்தைக் கழிக்கவும் இடம் கேட்டார். வீட்டுக்காரர் இடைகழியைக் காட்டி’ அதில் ‘ஒருவர் படுக்கலாம்’ என்று கூறி இடம் கொடுத்துக் கதவினைத் தாளிட்டுக் கொண்டு உள்ளேபோய்ப் படுத்துக்கொண்டார். இவர்தான் பொய்கை யாழ்வார். மழையோ விடாமல் பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து அதே வீட்டில் தங்க இடம் கேட்டார். பொய்கையார், ‘ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்’ என்று கூறிக்கொண்டே வந்தவருக்கு இடங்கொடுத் தார். இவர்தான் பூதத்தாழ்வார். மேலும் சிறிது நேரம் கழிந்ததும் மூன்றாவதாக மற்றொருவர் அதே வீட்டிற்கு வந்து ஒதுங்க இடம் வேண்டினார். இடைகழியிலிருந்த இருவரும் ‘ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்’ என்று கூறிக் கொண்டே அவரையும் அழைத்துக் கொண்டனர். இப்போது வந்தவர் பேயாழ்வார். இன்கவிபாடும் பரம கவிஞர்களாகிய இம்மூவரும் இறைவனுடைய திருக்குணங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிய வண்ணம் இருந்தனர். இவர்கள் மூவரும் ஒருவரையொருவர் முன்பின் அறியாவதவர்ளே.

இந்நிலையில் குரல் கொடுக்காது இசைவும் பெறாது நான்காமவராக யாரோ ஒருவர் நுழைந்துவிட்டார்; நெருக்கத் தினால் இது தெரிந்தது. இப்புதியவரைத் தெரிந்து கொள்ள அந்த இருட்டிலும் மழையிலும் விளக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் பொய்கையாழ் ஒரு விளக்கேற்றுகின்றார். இதுதான் விளக்கு:

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச்-செய்ய சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே என்று.”

17. இக்காலத்தில் இதனை “ரேழி என்று வழங்குவர் வாயிலுக்கும்

வீட்டிற்கும் இடைப்பட்ட ஒடுக்கான இடம். வடமொழியில் இது தேஹனி என வழங்கப்பெறும்.

18. முத. திருவந் - 1