பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

(தகளி-அகல்; வார்-நீண்ட வெய்ய-வெப்பமான; கதிரோன்-பகலவன்; செய்ய -சிவந்த சுடராழியான்-ஒளிவீசும் சக்கரத்தையுடைவன்; இடர்ஆழி . துன்பக் கடல்)

உலகத்தை அகலாகவும் , கடலை நெய்யாகவும், கதிரவனைத் திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றிவிட்டார். இந்தப் பாசுரத்தின் மகிமையால் அந்த இடைகழியில் பளிச்சென்று ஏதோ ஒரு திரை விலகி எப்படியோ ஒளியும் வந்து விட்டது; புறத்தே கவிந்து கிடந்த இருளும் நீங்கியது. அதே சமயத்தில் பூதத்தாழ்வாரும் ஞான விளக்கேற்றினார். இதோ அந்த விளக்கு:

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி ஞானச் சுடர்விளக்(கு) ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்து நான்’

(ஆர்வம்-விருப்பம்; நன்பு-ஆன்மா)

அன்பை அகலாகவும், பொங்கிவரும் ஆர்வத்தை நெய்யாகவும், சிந்தையைத் திரியாகவும் கொண்டு ஞானவிளக்கு ஏற்றினார் பூதத்தார். இந்த விளக்கினால் அகத்தே மண்டிக்கிடந்த உள்இருட்டும் நீங்கியது. உடனே அந்தப் பேயாழ்வார் நான்காவது ஆளைக்கண்டுபிடித்துவிட்டார். அந்த எக்களிப்பே ஒரு பாசுரமாக வடிவங்கொண்டு நான்காவது ஆள் எம்பெரு மானே (திருக்கோவலூர்த் தீங்கரும்பே') என்று காட்டிவிட்டது. பாசுரம் இது:

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்; திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன்;-செருக்கிளரும் பொன்ஆழி கண்டேன்; புரிசங்கம் கண்டேன்; என்ஆழி வண்ணன்பால் இன்று.”

(திரு-இலக்குமி; அருக்கன்-சூரியன்; செருகிளரும்-போரில் வல்லமை காட்டும்;

ஆழி -சக்கரம்; ஆழிவண்ணன்-கடல் நிறத்தவன்)

பேயாழ்வார் முதன் முதலாகப் பெரிய பிராட்டியாரின் அருள் வடிவத்தைக் கண்டார்; பொன் மேனியையுடைய

19. இரண். திருவந் , 2. 20. மூன். திருவந் - 1