பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர்த்தீங்கரும்பு 201

சந்நிதித் தெருவின் கோடியிலுள்ள கோபுரத்தைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டே திருக்கோயிலின் வாயிலை அடைகின்றோம். கோயில் மிகப் பெரியது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் முதலில் நாம் காண்பது கொடிமரம். அதனைத் தாண்டிச் சென்றால் திருமங்கை மன்னன் கட்டிய கோபுரவாயிலை அடையலாம். அதனைக் கடந்து சென்றால் பெரிய மண்டபத்தைக் (பாண்டியன் மண்டபம்) காணலாம். இதனை அடுத்துதான் கோயிலின் கருவறை உள்ளது. அங்குத் தான் வியந்தவர்வெருக்கொள விசும்பின் ஓங்கிய உலகளந்த திரிவிக்கிரமன் கிழக்கே திருமுகங்கொண்டு இருப்பதைக் காண்கின்றோம். பெயரளவிலேயன்றி வடிவிலும் மூலவர் விண்ணுற நிமிர்ந்து நிற்கும் திரிவிக்கிரமனாகவே காட்சி அளிக்கின்றார். காஞ்சியில் உலகளந்த பெருமாள் கோயில் சுவரின்மீது செதுக்கியுள்ள சிற்பம் இந்தப் பெருமான் தனியே நிற்கும் வடிவமேயாகும். இந்த மூலவரின் திருவுரு மரத்தாலானது. முகத்திலே நல்ல களை அமைந்துள்ளது. எம்பெருமானின் ஒரு திருவடி மகாபலிச் சக்கரவர்த்தியின் தலை மீது வைத்த நிலையில் உள்ளது. மற்றொரு திருவடியோ விண்ணை அளப்பதாகத் துக்கிய நிலையில் காணப் பெறு கின்றது. பெரிய பிராட்டியார், மாபலி, சுக்கிராச்சாரியார், மிரு கண்டு முனிவர், அவர் துணைவி, முதலாழ்வார்கள் மூவர் முதலானோர் சூழ நிற்க வலத்திருவடியை நான்முகனும், இடத் திருவடியை மாபலியின் புதல்வன் நமுசியும் ஆராதித்து நிற்கின்றனர். இரண்டடி நிலம் போக எஞ்சின ஒரடி நிலம் எங்கே?’ என்று மாவலியை வினவுவதுபோல் வலக்கையின் ஏந்திய நிலையில் காணப்பெறுகின்றார் எம்பெருமான். இந்தக் கோலத்தில் எம்பெருமானைக் காணும் நாமும்,

“ஒண்மிதியல் புனல்உருவி ஒருகால் நிற்ப

ஒருகாலும் காமரூசீர் அவுணன் உள்ளத்(து) எண்மதியும் கடந்(து) அண்ட மீது போகி

இருவிசும்பின் ஊடுபோய் எழுந்து, மேலைத் தன்மதியும் கதிரவனும் தவிர ஒடித்

தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை

மலர்புரையும் திருவடியே வணங்கினேனே

• *24

24. திருநெடுந் - 5