பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர்த் தீங்கரும்பு 203

இலக்குமி நாராயணன், இலக்குமி வராகன், இலக்குமி நரசிம்மன் ஆகிய மூவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மேலும் இராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகள் இவர்கள் சந்நிதிகளையும் இங்குக் காணலாம்.

இரண்டாவது பிராகார்ம், கல்யாண மண்டபம் முதலிய வற்றைக் கடந்து சென்றால் புஷ்பவல்லித்தாயார் (பூங்கோவல் நாச்சியார்) சந்திநிதியை அடையலாம்; அவளையும் சேவிக்க லாம். தாயார் சந்நிதி மிக விரிவாக அமைக்கப் பெற்றுள்ளது. கட்டட விவரங்களைக் கூர்ந்து நோக்கினால் நாய்க்க மன்னர்களே கோயிலின் பெரும் பகுதியைக் கட்டியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. இக்கருத்தினை அரண் செய்வதுபோல் நாய்க்க மன்னர்களது சிலைகளும் அங்கு அதிகமாகக் காணப் பெறுகின்றன. இத்தலத்து, எம்பெருமானின் திருநாமம் ஆயனார் என்பது. திருமங்கையாழ்வாரே ‘மதிள் கோவல் இடைகழி

ஆயனை’’ * 328

என்றும், ‘மதிள் கோவல் இடைகழி மைந்தனை என்றும் குறிப்பிடுவர். எம்பெருமானாரின் சீடரில் ஒருவராகிய ஆயனார் என்பருடைய வழியில் வந்த ஒருவர் இன்றும்

அறநிலையக் காவலராகவும் சீடராகவும் இருந்து வருகின்றார்.

தீர்த்த யாத்திரையாக வந்த அர்ச்சுனன் தென் பெண்ணை யாற்றில் தீர்த்தமாடி ஏழேழுபிறப்பையும் போக்கிக் கொண்டு திருக்கோவலூர்த் திரிவிக்கிரமனையும் சேவித்தான் என்று வில்லிபுத்துராழ்வார் குறிப்பீடுவர்.

“உருகுங் கமழ் நெய்பாலிரு பாலும் கரையொத்து பெருகுந் துறை யேழேழு பிடிப்பும்கெட மூழ்கிக்க கருகுங் கருமுகில் மேனியர் கவிஞானியர் கண்ணில் பருகுஞ் சுவை அமுதானவர் பாதம்தலை வைத்தான்.”

(கமழ்-வாசனை வீசும்; இருபால்-இரண்டு; கரையொத்து-கரையின் அளவுக்கு; பெருகும் வழியும்; துறை-பெண்ணையாற்றின் துறை,

முகில்மேனியர்-மேகவண்ணர்;கவிஞானியர்-முதலாழ்வார்கள்; பாதம்-திருவடிகள்; தலைவைத்தான் - வணங்கு கினான்)

27. பெரி. திரு - 7. 3 : 2 28. மேலது - 7. 10 : 4 29. வில்லி பாரதம் - ஆதிபர்வம் - அர்ச். தீர்த்த - 16