பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

என்பது அவர் வாக்கு. பரந்தாமன்மீது கொண்டுள்ள பக்தியில் ஆழ்வார் பெருமக்களின் பக்தியுடன் ஒப்பிடக் கூடியவரும் தொண்டை நாட்டைச் சேர்ந்தவருமான வில்லிபுத்துராரின் நாட்டுப்பற்றையும், முதலாழ்வார்கள் பேரில் அவர் கொண்டுள்ள பேரன்பையும் பெருமதிப்பையும் இப்பாடலில் கண்டு மகிழலாம்.

ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பாகவே திருக்கோவலூர் புகழ் பெற்றிருந்தது. சங்கப் புலவர்களை ஆதரித்து வந்த கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி இவ்வூரைச் சார்ந்தவன். பெண்ணை யாற்றங்கரையிலுள்ள பகுதி அக்காலத்தில் ‘மலாடு’ என்ற பெயரால் வழங்கியது. மலையமான் திருமுடிக்காரி திருக்கோவ லூரைத் தலைநகராகக் கொண்டு இந்நாட்டை ஆண்டு வந்தான்.

“துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கான் மூன்றுரைப்ப பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்”

என்ற அகப்பாடலில் கோவலுரைப்பற்றியும் பெண்ணை யாற்றைப்பற்றியும் உள்ள குறிப்பினைக் காணலாம். குறுந்தொகையிலும்,

“முரண் கொடுப்பிற் செவ்வேள் மலையன் முள்ளுர்க் கானம்....’

என்ற பாடற்பகுதியல் கோவலூருக்கு அருகில் மலைய மானுக்குச் சொந்தமாக இருந்த ‘முள்ளுர்க்கானம்’ பற்றிய குறிப்பு உள்ளது. மலையனுக்கு ‘முள்ளுர்ப் பொருநன்’ என்ற பெயரும் உண்டு.

‘துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்னை’ என்ற சொற் றெடரை ‘துஞ்சாமுழவு’ என்ற சங்கப்பாடலின் (அகம்- 35) சொற்றொடருடன் ஒப்ப நோக்கினால் சங்க காலத்திலேயே திருக்கோவலூர் விழாக்கள் மலிந்த ஊராகத் திகழ்ந்தது என்பது

30. அகநானூறு - 35

31. குறுந்தொகை - 132; நற்றிணை - 170 அகநானூறு - 209 புறநானூறு - 123, 126 என்ற பாடல்களிலும் இக்குறிப்பினைக் காண்க. 32. பெரி. திரு. 2. 10 : 1