பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறுவதுமுண்டு. எது எப்படியாயினும் யானை போன்று உயர்ந்த கட்டு மலையில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது மட்டிலும் உண்மை என்பதை நேரில் பார்த்தவர்கள் நன்கு அறிவர்.

அத்திகிரியை அடைந்த நாம் மேலும் ஆறுபடிகளை ஏறிக் கடந்து அத்திகிரி அருளாளனின் கருவறைக்கு வருகின்றோம். நீண்டு உயர்ந்து நின்ற திருக்கோலத்தில் தங்கக் கிரீடமும் தங்கக் கவசமும் அணிந்த நிலையில் பக்தர்கட்குச் சேவை சாதிப்பதைக் காண்கின்றோம். எழில் வாய்ந்த இந்த வரதராசர் அருள் கொழிக்கும் திருமுக விலாசம் உடையவர். இவருடைய அழகில் சொக்கி நிற்கும் வேதாந்த தேசிகர்,

ஐயுறவும் ஆர்இருளும்
      அல்வழியும் அடைந்தவர்க்கு
மெய்யருள்செய் திடுந்திருமால்
      வேழமலை மேயவனே[1]

(ஐயுறவு-சந்தேகம்; ஆர் இருள் - பூர்ண அஞ்ஞானம்; அல்வழி-தகாதவழி)

என்று மெய்யுருகி நிற்பதைக் காண்கின்றோம். திருவத்தியூரான் மீது ‘அருத்த பஞ்சகம்’ ‘மெய்விரதமான்மியம்’, ‘திருச்சின்ன மாலை’, ‘அடைக்கலப் பத்து’ ஆகிய சிறிய பிரபந்தங்களையும் அருளிச் செய்துள்ளார் இவர். இந்த அத்திகிரி அருள்முகிலைப் பூதத்தாழ்வார்.

என்னெஞ்சம் மேயான்என் சென்னியான் தானவனை
      வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன் - முன்னம்சேய்
ஊழியான் ஊழி பெயர்ந்தான் உலகேத்தும்
      ஆழியான் அத்தியூ ரான்”[2]

{ஆழியான் - கடலில் வாழ்பவன்)

என்றும்,

“அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல் துயிலவான்-முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்”[3]

  1. தேசி.பிரபந்-252
  2. இரண்டாம் திருவந்-95
  3. இரண். திருவந்-96