பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப்

“பிரகிருதி மறுவாக மான்தண் டாகத் தெருள் மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள் சார்ங்கம்சங் காகமனம் திகிரி யாக இருடிகங்கள் ஈரைந்தும் சரங்க ளாக இருபூத மாலைவன மாலை யாகக் கருடன்உரு வாம்மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரிமேல் நின்று அனைத்தும் காக்கின்றானே.

(புருடன்-சீவான்மா, மணி-கெளத்துவம்; மறு-ஸ்ரீவத்ளலம்: மான் - மகான் தத்துவம்; தண்டு-கெளமோதகி; தெருள்-ஞானம், வாள்-நந்தகம்; மருள் - அஞ்ஞானம், உறை-கத்தியின் உறை; ஆங்காரங்கள்-தாமஸம், இராஜலம், சாத்துவிகம்; சார்ங்கம் சங்கு-முறையே வில், பாஞ்சன்யம்; இருடிகங்கள் ஈரைந்து - ஞானேந்திரியங்கள் ஐந்து; கர்மேந்திரியங்கள் ஐந்து; இருபூதம்-தன்மாத்ரங்கள் ஐந்து, பூதங்கள் ஐந்து; மாலை-வரிசை; கரிகிரி-அத்திகிரி}

என்ற பாசுரத்தைச் சிந்திக்கின்றோம். பேரருளாளன் சேதநம் அசேதநம் என்னும் தத்துவங்கள் அனைத்தையும் தனக்கு அணிகளாகவும் ஆயுதங்களாகவும் கொண்டு ‘குன்றின் மேலிட்ட விளக்கு’ என்று கூறும்வகையில் அத்திகிரியின்மேல்அனைவரும் கண்டுகளிக்குமாறு நின்று உலகத்தைக் காத்தருள்கின்றான் என்பதை அறிகின்றோம்.

திருக்கோயிலின் சூழ்நிலையையும் ஆராயவேண்டும் என்று நம் உள்ளம் விழைகின்றது. முதலில் நூற்றுக்கால் மண்டபத்தைக் காண்கின்றோம். குதிரைகள், யாளிகள், அவற்றின்மீது இவர்ந்து செல்லும் வீரர்கள் ஆகிய சிற்பங்களையுடைய கற்றுண்கள் நிறைந்தது இம்மண்டபம். மன்மதன், இரதி தேவி முதலிய சிற்ப வடிவங்களையும், கல் சங்கிலி முதலிய திறன் மிக்க நுட்ப வேலைப்பாடுகளையும் அவண் கண்டு களிக்கலாம். இவை வேலூர் முதலிய தலங்களில் உள்ள நாய்க்கர் காலத்துச் சிற்ப வடிவங்களுடன் ஒப்பிடத் தக்கவை அல்லவென்றும், காலத்திலும் கலை அழகிலும் பிற்பட்டனவாகத் தெரிகின்றன என்றும் என் அரிய நண்பர் அமரர் திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் கருதுகின்றார்கள்.

நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே இருப்பது ‘அனந்த புஷ்கரணி'; ‘சேஷ தீர்த்தம்’ என்றும் இது வழங்கப்படுகின்றது. இது

14. தேசி. பிரபந்-80