பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சொன்னவண்ணம் செய்த பெருமாள்

17

மே மாதத்தில் காலைக் கதிரவன் கனன்று எழுகின்றான். இக் கதிரவனின் தோற்றம் முதல் நாள் மாமல்லபுரம், திருவிடஎந்தை முதலான இடங்கட்குச் சென்றபோது கடு வெயிலில் துன்பப் பட்டதை நினைவிற்குக் கொணர்கின்றது. இந்த நினைவு நம்மாழ்வாரின் பாசுரத்தை நினைக்கத் துண்டுகின்றது.

நானிலம் வாய்க் கொண்டு நல்நீர்
    “அறமென்று கோதுகொண்ட
வேனில்அம் செல்வன் சுவைத்துஉமிழ்
    பாலைகடந்த பொன்னே!
கால் நிலம் தோய்ந்து, விண்ணோர்தொழும்
    கண்ணன் வெஃகா உது, அம்பூந்
தேன் இளஞ் சோலைஅப் பாலது;
    எப்பாலைக்கும் சேமத்ததே”.[1]

(நால் நிலம்-முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்; வாய் கொண்டு-(தன் கதிர் முகத்தால்) வாயில் பெய்து கொண்டு; அற-நீங்கும்படி; கோது-சத்தற்ற பகுதி, வேனில் அம் செல்வன்-கதிரவன்; சுவைத்து-உருசி பார்த்து; உமிழ் வெறுத்துக் கழித்த; பொன்-இலக்குமி போன்றவள்; உது-அடுத்துள்ளது: அப்பாலது-அவ்விடத்தில் உள்ளது; பாலை-துன்பம்; சேமத்தது-இன்பம் தரும் இடம்.)

என்பது ஆழ்வார் பாசுரம். ‘நகர் காட்டுதல்’ என்பது இப் பாசுரத்தின் துறை. தலைவன் தலைவியை உடன் கொண்டு இடைவெளியிலுள்ள பாலை நிலத்தைக் கடந்து தன் ஊருக்கு ஏகுகின்றான். அப்பொழுது அவளுக்கு வழிநடை இளைப்புத் துன்பம் தோன்றாதிருக்கும் பொருட்டு அவளை நோக்கி, ‘அதோ தெரிகின்றதே நகர், அதுதான் நாம் அடைய வேண்டிய இடம்’ என்று கூறுதல் இத்துறையின் இலக்கணம்.

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலியவை கற்ற நாம் பாலை நிலத்தின் தன்மையை அறிவோம். இங்கே நாம் “நிலந்தான் நாலென்பாரும் அஞ்சென்பாருமாயிருக்கும்; ஐந்தென்கின்ற வர்கள் பாலை நிலத்தையும் தன்னிலே ஒன்றாக்கிச் சொல்லுவார்கள்; நாலென்றவர்கள் இப் பாலைநிலந்தான் மற்றை நாலிலும் உண்டென்கிறார்கள்; அதாகிறது - நீரும் நிழலும் இல்லாத இடம் பாலையாம் அத்தனையிறே” என்ற நம்பிள்ளையின் ஈட்டையும் நினைக்கின்றோம். பகலவன் தனது

  1. திருவிருத்-26

தொ.நா-2