பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னவண்ணம் செய்தபெருமாள் 23

அடுத்து, ‘'வெஃகாவில் உன்னிய யோகத்து உறக்கத் தைப்’ பாதாதி கேசமாகச் சேவிக்கின்றோம். இப்போது பேயாழ்வாரின் பாசுரங்கள் நினைவிற்கு வருகின்றன.

‘அன்றிவ் உலகம் அளந்த அசவேகொல் நின்றிருந்து வேளுக்கை நீள்நகர்வாய்-அன்று கிடந்தானைக் கேடில்சீ ரானை முன்கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்’

(அசவு-சிரமம்; அயர்வு என்பதன் விகாரம்; வேளுக்கை-காஞ்சியிலுள்ள

திவ்விய தேசம், நீள் நகர்-வெஃகா: கஞ்சை.கம்சனை: கடந்தானை - கொன்றவனை)

என்ற பாசுரத்தை அது சந்தித்து ‘உறங்கும் எம்பெருமானை நன்றாகக் காண்பாயாக’ என்று நெஞ்சினை வேண்டுகின்றோம். நின்று இருந்த வண்ணம் இவ்வுலகங்களையெல்லாம் அளந்ததனால் பெருமானுக்கு உண்டான அயர்வு தீர இத்திருப்பதியில் உறங்குவதாக ஆழ்வாரின் திருவுள்ளம் எண்ணி மகிழ்கின்றது.

எம்பெருமானின் இன்னொரு வெற்றிச் செயலையும் அநுசந்தித்துப் பேயாழ்வார் மங்களாசாசனம் செய்த இன்னொரு பாடலும் நம் நினைவுக்கு வருகின்றது.

“இசைந்த அரவமும் வெற்பும் கடலும் பசைந்தங் கமுது படுப்ப-அசைந்து கடந்த வருத்தமோ? கச்சி வெஃகாவில் கிடந்துஇருந்து நின்றதும் அங்கு”

(இசைந்த தகுதியான அரவம்-பாம்பு; வெற்பு-மலை, பசைந்து - தொடர்பு படுத்தி, படுப்ப உண்டாகும்படி, அசைந்து-அலைச்சல் பட்டு; அங்கு-அந்தக் காஞ்சியில்)

என்ற அந்தப் பாசுரத்தையும் ஓதி உளங்கரைகின்றோம். ‘மலைகளின் நடுவில் நின்றும், நீர் நிலைகளில் முழுகியும், ஐந்து நெருப்பிடையே நின்றும் தவம் செய்ய வேண்டா; திருவெஃகாவில் திருக்கண் வளர்ந்தருளும் செங்கண் மாலை

17. பெரிய திருமடல்-கன்னி. 127.8. 18. மூன். திருவந்-34 19. மூன்.திருவந்-64