பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

பினும் ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜசு ஆகிய ஆறு குணங்கள் மட்டிலுமே சிறப்பாய்க் கூறப்பெறுகின்றன. அங்ஙனமே, ஆயுதங்கள் பலவாயினும், சங்கு, சக்கரம், கதை, வாள், வில் ஆகிய ஐந்து ஆயுதங்கள் மட்டிலுமே சிறப்பாய்ப் புகலப் பெறுகின்றன. எம்பெருமானை வெறுத்து நிற்கும் பிரதிகூலருக்கு இவை ஆயுதங்களாகத் தோன்றும். அவனை விரும்பி நிற்கும் அனுகூலருக்கே அவை அழகிய ஆபரணங்களாகக் காட்சி அளிக்கும். அதனாற்றான் ஆழ்வார்,

‘கூர்ஆர் ஆழி வெண்சங்

கேந்திக் கொடியேன்பால்

வாராய், ஒருநாள் மண்ணும்

விண்ணும் மகிழவே’

(கூர்ஆர்-கூர்மை பொருந்திய)

என்று இறைஞ்சுவதைக் காண்கின்றோம். நித்திய சூரிகளே ‘திவ்வியாயுதாழ்வார்கள்’ எனப் பெயர் பெற்றுள்ளனர். அவை எம்பெருமானுடைய ஆயுதங்கள் என்னும் நிலைக்கேற்ப ஞானம் சக்தி முதலிய குணங்களையும் பெற்றுள்ளன.

எம்பெருமானைக் காட்டிலும் அவனுடைய திவ்வியாயுதங் கட்குக் கருணை அதிகம். காக்கை வடிவமாக வந்த அசுரனைத் துரத்திச் சென்ற இராமபாணம் அவனை அப்பொழுதே அழிக்க வில்லை. இதற்கு, ‘இவன் எம்பெருமானைச் சரண்புக்கு உய்யட்டும்’ என்னும் அதனுடைய கருணையே காரணம் என்று சொல்லப் பெறுகின்றது. இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் அலைபாய்ந்தெழுந்த வண்ணம் காஞ்சியில் கீழ்-மேல் சாலைக்குத் தென்திசையில் உள்ள அட்டபுயகரம் என்ற திருக் கோயிலை நோக்கிப் புறப்படுகின்றோம். அஷ்டபுய+க்ருஹம் என்பன அட்டபுயகரம் என்றாயிற்று. ‘க்ருஹம்’ என்ற வடசொல் ‘கரம்’ எனத் திரியும். ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ருஹம் அட்டபுயகரம் என்பது. ‘அட்டபுயவகரம்’ என்பது அட்டபுய கரம் என மருவிற்று என்றும் கொள்ளலாம். அகரமாவது, அக்ரஹாரம். திவ்விய தேசத்தைமுன்னிட்டே எம்பெருமானைப்

1. திருவாய் 6.9:1