பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅட்டபுயகரத்து எம்மான் 29

தோற்றமாகக் காணப்பட்டது. அங்ஙனமே இராமனது அழகினில் ஈடுபட்டு அவனை அணையவேண்டும் என்று எண்ணிய சூர்ப்பனகைக்கும் ஒர் ஆணுருவம் உருவெளித்தோற்றமாகக் காணப்பட்டது. இவை இரண்டும் அன்பினால் நிகழ்ந்தவை. இராவணன், தான் சீதையைக் கவரும் பொருட்டுத் தனக்கு உதவியாக, மாரீசனைப் பொன் மானாகச் செல்லுமாறு ஏவியபோது, மாரீசன் இருமுறை இராமனால் ‘சூடுகண்டு பூனை'யாதலின், பார்த்தவிடமெங்கும் தனக்கு இராமனுருவம் தோன்றுவதாகக் கூறியது அச்சத்தால் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். இத்தகைய உருவெளித்தோற்றத்தைத் தொல்காப்பியரும் ‘நோக்குவன எல்லாம் அவையே போறல்’ என்ற ஒரு காதலி துறையாக வகுத்துக் காட்டுவர்.

+3+ &

நாம் இத்தலத்து எம்பெருமானைச் சேவிக்கச் சென்ற பொழுது ‘பகல் பத்து - இராப்பத்து உற்சவம் நடைபெற்ற காலமாக இருந்தது. முதலில் மகாமண்டபத்தில் எழுந்தருளி யிருந்த ஆழ்வார்களைச் சேவித்து விட்டுக் கருவறையை நோக்கி விரைகின்றோம். எம்பெருமான் நல்ல முறையில் அலங்கரிக்கப் பெற்றிருந்தான். இயற்கை எழில் கொண்ட திருமேனி ஆடை அணிகளின் சேர்க்கையால் பேரழகுடன் பொலிந்தது. நம்மை மறந்து மூர்த்தியின் என்றைக்கும் எங்கும் கண்டறியாத திருக்கோல அழகில் நம்மையே பறிகொடுக்கின்றோம். நாமும் பரகால நாயகியின் நிலையிலிருந்துகொண்டு எம்பெருமானுடைய திருமேனியின் அழகில் ஈடுபட்டு நிற்கின்றோம். ஆனால், நாம் சிந்தனை உலகில் சஞ்சரித்த வண்ணம் இருக்கின்றோம்.

இங்ஙனம் சிந்திக்கின்றோம்: திருவிட எந்தையைச் சேவிக்க வந்தபொழுது முகங்காட்டாமல் ஆழ்வார் நாயகியைத் துடிக்கவிட்ட நிலையை எண்ணுகின்றோம். அவள் பட்டபாடு களைத் திருவுள்ளம் பற்றின எம்பெருமான் இந்தத் திருப்பதியில் ஆழ்வார் நாயகிக்கும் பரம போக்கியமாகச் சேவை சாதித்த நிலையையும் சிந்திக்கின்றோம். பரகாலநாயகி உறக்கம் வராமல் எம்பெருமானை நினைத்த வண்ணம் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கின்றாள். அவள் ஊனக்கண் முன்னே,

6.தொல் - பொருள் - களவியல் - நூற்பா-18.