பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅட்டபுயகரத்து எம்மான் 33

கண்ணன் சேவையில் ஆழங்கால் பட்டுக் கொண்டுள்ளாள். கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தும் பெருமழை யினின்றும் ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த அற்புதச் செயலைச் சிந்திக்கின்றாள். மாய யானையின் கொம்புகளை முள்ளங்கியைப் பிடுங்குவதுபோலப் பிடுங்கிய அற்புதச் செயலை அவன் கையிலுள்ள மருப்பு நினைக்கச் செய்கின்றது. ‘இவன் கண்ணனே’ என்று அறுதியிடுவதற்கு முன்பு காட்சி மாறுகிறது. பேரொளி மிக்க திருவாழியும் திருச்சங்கும் கைகளில் இலங்க, வேதம் ஒதுபவர்கள் முன்நிற்க, பரமபத நாதன்போல் சேவை சாதிக்கின்றான். இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்றாக மாறிய காட்சிகளால் ஐயுற்ற ஆழ்வார் நாயகி “இவர் அட்டபுயகரத்தேன்’ என்று எம்பெருமானே விடை பகர்கின்றான்.’

மீண்டும் காட்சி மாறுகின்றது. முன்யை உருவம் மாறி நீலமேக சாமள வண்ணனாய்க் காட்சி அளிக்கின்றான் எம்பெருமான். இவன் வியூகநிலையிலுள்ள ஐயனோ என்று ஐயுறுகின்றாள் பரகாலநாயகி.

‘கலைகளும் வேதமும் நீதிநூலும்

கற்பமும் சொற்பொருள் தானும், மற்றை நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும்

நீர்மையி னால்அருள் செய்து,நீண்ட மலைகளும் மாமணி யும்,மலர்மேல்

மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன,

அட்டபுயகரத் தேன்.என் றாரே’

(கலை-உபநிடதம்; வேதம்-நான்மறை நீதிநூல்-இதிகாசம், கல்பம்-கல்ட

சூத்திரம்; சொல்-இலக்கணம்; பொருள்-மீமாம்சை; நீர்மை-கருணை; மணி.கெளத்துபம்; மங்கை-பெரிய பிராட்டியார்)

இப்பாசுரத்தில் ‘சாத்திரங்களாகிய கடல்களைத் தந்தருளிய கருங்கடலோ இவர்?’ என்று விடுக்கும் வினாவிற்கு ‘அட்டபுயகரத்தேன், நான்’ என்று எம்பெருமான் விடையளிப் பதைக் காண்கின்றோம்.

‘கலைகள்’ என்ற சொல் பொதுவாகச் சாத்திரங்களை யெல்லாம் குறிக்குமாயினும், ஈண்டு சந்தர்ப்பத்தால் வேதாந்த

11. பெரி. திரு. 2.8:4 12. பெரி. திரு.2.8:5, தொ.நா-3