பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅட்டபுயகரத்து எம்மான் 35

விதமாக அறியப் பார்த்தாலும் ஒன்றும் அறியக்கூட வில்லையே.ஆய்ந்தெடுத்த அணிகளையுடைய மகளிருடைய வளைகள், நெஞ்சு, நிறை முதலிய அனைத்தையும் தம்முடை யனவாக ஆக்கிக் கொள்ளுவதற்காகவே இங்கு வந்து சேர்ந்தனர் போலும்!” என்று நினைக்கத் தோன்றுகின்றது அவளுக்கு.

“எங்ஙனும் நாம்இவர் வண்ணம்எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார் சங்கும் மனமும் நிறைவும்எல்லாம்

தம்மன வாகப் புகுந்து’

(வண்ணம்-தன்மைகள், ஏந்திழையார்-மகளிர்; சங்கு-(இங்கு)வளைகள்; நிறைவு - அடக்கம்; தம்மனவாக-தம்முடையவனவாகும்படி; புகுந்து-வந்து சேர்ந்து)

என்று எண்ணுகின்றாள் பரகாலநாயகி. இவருடைய திருமேனி யோ பூவையும் காயாவும் நீலமும் மேகமும் போன்றுள்ளது. அவற்றில்,

‘பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலர் என்றும் காண்தோறும், பாவியேன் மெல்ஆவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான்உருவே என்று.’

(பூவை, காயா, நீலம், காவி..இவை யாவும் நீல நிறமுள்ள பூக்கள்; நீலம் - கருநெய்தல்; காவி.செங்கழுநீர்ப்பூ பூக்கின்ற” என்ற அடைமொழியை எல்லாவற்றிலும் சேர்க்க)

என்று நம்மாழ்வார் போலிகண்டு மேல்விழும்படியான அளவுக்கு அளவிறந்த அன்பினால் அத்திருமேனியில் ஈடுபடு கின்றாள் பரகாலநாயகி.

“தாமும் பொங்கு கருங்கடல் பூவைகாயாப்

போதவிழ் நீலம் புனைந்தமேகம், அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன

அட்டபுயகரத் தேன்.என் றாரே.”

('போதவிழ்” என்ற அடைமொழியைப் பூவை, காயாவுக்கும் கூட்டிப் பொருள் கொள்க)

14. பெரி. திரு. 2,8:6. 15. பெரி. திருவந் - 73. 16. பெரி. திரு.2.8:6.