பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

இல்லத்திற்குப் போக நினைக்கவில்லை. செல்வச் செருக்குடன் திகழ்ந்த துரியோதனனையும் ஒரு பொருளாக மதித்து அவனுடைய மாளிகைக்கும் செல்ல ஒருப்படவில்லை. எல்லாவற்றிலும் தாழ்ந்தவராக நினைத்திருந்த விதுரனுடைய திருமாளிகைக்குத் தானாகவே சென்று ‘என்ன மாதவம் செய்ததோ இச்சிறு குடில்?’ என்று அவன் போற்றும் வண்ணம் திருவமுது செய்தருளினான்.

2. நீருக்குத் தண்மை இயல்பாக உள்ளது; வெப்பம் வந்தேறி. எம்பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறியாக இருக்கும். ‘நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்’’’ என்ற முமுட்சுப்படியின் வாசகம் காண்க.

3. நீர் சுட்டாலும் அதனை ஆற்றுவதற்கு நீரே தேவை. எம்பெருமான் சீறினாலும் அவனால்தான் அச்சீற்றம் தணிதல்வேண்டும் ‘தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்று குலசேகரப் பெருமாள் அருளியுள்ளதைக் காண்க.

4. நீர் இன்றி அமையாது உலகம்; அப்படியே எம்பெருமான் இல்லாமல் ஒரு செயலும் நடவாது. ஒருவன் விரும்பியதை மற்றொருவன் விரும்பாவண்ணம் உலகம் வெவ்வேறு விருப்பத்தையுடையதாக இருப்பினும் எல்லோரும் நீரை விரும்பியே ஆகவேண்டும். அதுபோலவே, எம்பெரு மானையும் யாவரும் பற்றியேயாக வேண்டும்.

5. நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள்புகுந்து விடும். எம்பெருமானும் ஏதாவது ஒரு சிறு காரணத்தைப் பற்றாசாகக் கொண்டு நம்மை ஆட்கொள்ளுவான். ‘திருமாலிருஞ்சோலை மலை என்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’

6. யாதொரு வேற்றுமையுமின்றி எல்லோரும் ஒரு துறையிலே படித்து குடைந்தாடலாம்படி இருப்பது நீர். எம்பெருமானும் பெரியார் சிறியார் என்னும் வேற்றுமையின்றி எல்லோரும் அடையத்தக்கவனாக இருப்பவன்.

6.மு.முட்சு-127. 7.பெரு. திரு-5:1 8. திருவாய் - 10.8:1