பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

(பசி ஆற்றுதல்-பசி தணித்தல்; வெற்பு-மலை; பார்-பூமி, வானம்-ஆகாயம்;

பண்டு முற்காலத்தில் (பிரளய காலத்தில்)

என்ற திவ்விய கவியின் பாசுரத்தையும் ஓதி உளங்கரை கின்றோம். உலகம் உண்ட பெருவயிற்றுக்கு ஆய்ச்சியின் முலைப்பால் எங்ஙனம் பசி தணித்ததோ? என்று கவிஞருடன் சேர்ந்து நாமும் வியப்புக் கடலில் ஆழ்கின்றோம். ‘உன்னுடைய மாயை இருந்தவாறு என்? கள்வன்’ என்ற பெயர் உனக்குத்தான் தகும்!’ என்று எண்ணுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் பாசுரத்திற்கு மூலம்போல் தோன்றும் பொய்கையாழ் வாரின் பரசுரமும் நம் உள்ளத்தில் குமிழியிடத் தொடங்குகின்றது.

“வான்ஆகித் தீஆய் மறிகடல்ஆய் மாருதம்ஆய் தேன்ஆகிப் பால்ஆம் திருமாலே! - ஆன் ஆய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு’

(மறிகடல்-அலையெறிகின்ற கடல்; மாருதம்-காற்று: ஆன் ஆய்ச்சி - யசோதை)

என்ற பாசுரத்தையும் அநுசந்திக்கின்றோம். ‘’ ஞானக்கனி’ போன்ற பரம போக்கியனான உன்னை ஞானியர் உட்கொள்ளக் கருதா நிற்க. நீ வேறொரு பொருளை போக்கியமாக நினைத்து உட்கொள்ளுவது என்னோ?’ என்ற ஆழ்வாரின் குறிப் பினையும் சிந்திக்கின்றோம். ‘அவ்வச் சாதிகளிலே அவதரித்து அதிலுள்ளாருடைய தாரகமே தனக்குத் தாரகமாயிரக்கிறபடி ஸ்ரீ வராகம் ஆனான் ஆகில் கோரைக்கிழங்கு தாரகமாம்; இடை யனாகில் வெண்ணெய் தாரகமாயிருக்கிறபடி, ‘ ‘பிரளயம் கொள்ளாதபடி வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறம்பே யுமிழ்ந்து ரட்சித்த வயிறு இத்தனை வெண்ணெயாலே நிறைக்க வேண்டியிருந்ததோ?’ என்ற இப்பாசுரத்தின் வியாக்கியான வாக்கியங்களும் நம் சிந்தையில் எழுகின்றன. இவற்றை அநுபவித்தவண்ணம் அடுத்த சந்நிதிக்குச் செல்லுகின்றோம்.

திருஉஊரகம்: ஒரு பெரிய திருமாளிகையின் சுற்றுப்புறத்தில் உள்ள சிறிய இல்லங்களில் வாடகைக்குக் குடியிருப்பவர்களைப் போல் திருக்கோயில் கொண்டு இருக்கும் மூன்று எம்பெருமான்களைச் சேவித்த நாம் திருமாளிகைக்கு

22. முதல். திருவந்-92