பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகளந்தபெருமாள் 49

என்ற பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஒதி உளங்கரை கின்றோம்.

பாசுரத்தின் சில சொற்களின் நயந்தில் நம் அறிவு ஈடுபடுகின்றது. எம்பெருமானின் திருப்பாதங்களைத் திருவடி’ என்று பெருமையாகச் சிறப்பித்துப் பேசாது பாசுரத்தின் முதல் அடியில் அவற்றைக் ‘கால்’ என்று குறிப்பிட்டதற்குக் காரணமென்ன என்று ஆராய்கின்றது. இதற்குப் பிரதிவாதி பயங்கரத்தின் உரை கைகொடுத்து உதவுகின்றது. ‘ஆழ்வார் இங்குக் கால்’ என்றது வெறுமனன்று; ஒரு கருத்துத் தோன்றவே இப்படி அருளிச் செய்தது; அதாவது சம்சாரிகளின் அபிப்பிராயத்தாலே சொல்லுகிறபடி, உலகளந்த காலத்தில் திருவடி எல்லார் தலையிலும் பட்டபோது சம்சாரிகள் ‘ஒருவருடைய கால் நம் தலையில் பட்டதே’ என்று வெறுத்திருந்த தத்தனையொழிய கோலமாம் என் சொன்னிக்கு உன் கமலம் அன்ன குரைகழலே (திருவாய் மொழி 4.3:6) என்றாற்போலே உகந்து கொண்டார்களில்லையே; அன்னவரது கருத்தாலே “கால்’ என்றது,’ என்ற விளக்கம் நம் உள்ளத்தைக் கவர்கின்றது.

‘'காமருசீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து’ என்ற சொற்றொடரின் நயத்தினையும் சிந்திக்கின்றோம். அழகெலாம் திரண்டுருண்ட வாமனன் ‘மூவடி நிலம் தா’ என்று கேட்டான். மாவலியோ, ‘மூவடி நிலந்தானே இவன் கேட்பது? அதைக்கொடுப்போம்; அது தவிர மற்ற நிலம் எல்லாம் நம்முடையது தானே’ என்று நினைத்துக் கொண்டிருந்தான். மூவடி மண்ணை இரந்து பெற்ற வாமனன் நிலவுலகம் முழுவதையும் ஒரே அடியால் அளந்து தள்ளிவிட்டான். ஆயினும் சலியாத மாவலி ‘பூமி போயினும் மேலுலகம் நம்முடையது தானே’ என்று எண்ணிக் கொண்டிருந்தான். மேலுலகத்தையும் மற்றொரு திருவடியால் அளந்து தள்ளிய வுடன், எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் இழந்தோமே!’ என்று வருந்தினான். இதுவே அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து’ என்ற தொடரின் கருத்தாகும்.

அறிஞர்கள் யாவரும் மாவலியை அகங்காரி என்றும் பகவத்

விபூதியைக் கொள்ளை கொண்டவன் என்றும் கடிந்து கூற

33. திவ்வியார்த்த தீபிகை- திருநெடுந். 5 (உரை காண்க.)

Glarn en 4