பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

ஆழ்வார் ‘காமருசீர் அவுனன்’ என்று புகழ்ந்து கூறியதன் கருத்துதான் யாது என்பதைச் சிந்திக்கின்றோம். வாமனதிரிவிக்கிரம அவதாரங்கட்குப் பிற்பட்டு வாழ்ந்த, வாழும் நம்மைப் போன்றவன் அல்லன் மாவலி. வாமன வடிவத்தின் பேரழகையும் சீலத்தையும் ஊனக்கண்ணாலே காணப்பெற்ற பெரும் பேறு உடையவன் அவன். ஆகவே, அப்பேற்றினைத் திருவுளங்கொண்டு அருளிச் செய்தது இது. ஆழ்வார் கருத்தினைச் சிறிதும் குறையாது அறிந்த வியாக்கியாதா கூறுவதைக் காண்போம்: ‘நானும் அடியேன் என்கிறதை விட்டு பகவத் விபூதியை அபஹரித்து ஒளதார்யத்தை ஏறிட்டுக்கொண்டு யஜ்ஞத்திலே இழியப்பெற்றிலேனே என்கிறார்,’ என்பதில் அவ்வமானத் திருவுருவத்தைக்காணும் பேறு பெறாத ஆழ்வாரின் ஏக்கத்தைக் காண்கின்றோம்.

இப்பாசுரத்தில் ‘இருவிசும்பினுடுபோய்’ என்பதே போதுமாயிருக்க, ‘அண்டமீது போகி..... எழுந்து’ என்று விதந்து கூறியன் கருத்தையும் சிந்திக்கின்றோம். அதற்கு உரையாசிரிய மன்னன் பெரிய வாச்சான்பிள்ளை கூறும் விளக்கம் இது: ‘'ஸ்ரீ வாமனனுடைய விஜயத்தில் தமக்குண்டான ஆதராதிசயத்தாலே (மிக்க அன்பாலே) அளக்கும் பிரதேசத்துக்குக் கொண்டைக்கோல்’ நாட்டுகிறார்’. ‘பாம்பின் கால் பாம்பறியும் என்ற உண்மையை இவ்வுரையில் கண்டு மகிழ்கின்றோம்.

கதிரவ மண்டலம் கடந்தபின் சந்திர மண்டலம் என்ற நியதி (புராணநியதி?) இருக்க இங்குத் ‘தண்மதியும் கதிரவனும்” என்று சந்திர மண்டலத்தை முந்துறப் பகர்ந்ததன் காரணத்தையும் விளக்குகின்றார் அந்த உரையாசிரியர்: ‘அஹங்காரிகளாய் மிகவும் விமுகராய் (பராமுகர்களாய்) இருக்கும் சம்சாரிகளின் தலையிலே ஸ்குைமாரமான (மென்மையான) திருவடியை வைக்கையாலே அத்திருவடிக்குண்டான வெப்பந்தீர சைத்தியோ பசாரம் (குளிர்ச்சி அளிக்கும் பணிவிடை) பண்ணவேண்டு மென்று திருவுள்ளம்பற்றி முந்துறச் சந்திர மண்டலத்தைப் பேசுகின்றர்’ என்று சுவைபடக் கூறுவது நம் உள்ளத்தைக் கவருகின்றது.

34. கொண்டைக் கோல்-பெரு வெள்ளத்தில் நிலம் அறிவதற்கு நிலவர்கள்

நாட்டும் கோலுக்கு இப்பெயர். இச்சொல் ‘ஈட்டிலும் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானங்களிலும் அதிகமாகப் பயின்று வருவது.