பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகளந்தபெருமாள் 51

திருமங்கையாழ்வார் வாமன-திரிவிக்கிரம அவதாரத்தை மிக அழகாகக் கூறும் பெரிய திருமடல் பகுதியையும் நன்குச் சிந்திக்கின்றோம்.

‘தன்உருவம் ஆரும் அறியாமல் தான்.அங்குஓர் மன்னும் குறள் உருவில் மாணியாய்-மாவலிதன் பொன் இயலும் வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து-நெஞ்சுருக்கி ‘என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடிமண் மன்னா! தருக” என்று வாய்திறப்ப-மற்றவனும் ‘என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ-மேல்எடுத்த பொன்னார் கனைகழல்கால் ஏழுலகும் போய்க்கடந்தங்கு ஒன்றா அசுரர் துளங்க-செலநீட்டி மன்னிவ் அகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் தன்னுலகம் ஆக்குவித்த தாளானை’

(குறன் உரு-வாமனன்; மாணி-பிரமச்சாரி, பொன் இயலும்-தங்க தானம் செய்யும்படியான; போர் வேந்தர் மன்னன்-மாவலி; வஞ்சித்து-மயக்கி; வாய்திறப்ப - வாய் திறந்து கேட்க, அத்துணைக் கண்-அந்தக் கணத்தில்; விண்தடவ ஆகாயத்தை அளாவ; கனைகழல்கால்-வீரத்தண்டை அணிந்த திருவடி, துளங்க-துன்பப்படும் படி; மன்னும்-நிலை பெற்ற, தாளானை - திருவடிகளையுடையவனாய்)

என்ற பாடற்பகுதியிலுள்ள வருணனையை நினைந்து வியப்பும் வெகுட்சியும் ஒருங்கே தோன்ற அதில் பெரிதும் ஈடுபட்டு நிற்கின்றோம். திரைப்படத்தில் ஊனக் கண்ணால் காணும் காட்சியில் மனம் ஈடுபடுவதுபோல் மனக்கண்ணால் காணும் இக்காட்சியில் மனம் ஆழங்கால் பட்டு நிற்கின்றது.

இந்தச் சந்நிதியில் தீர்த்தமும் திருத்துழாயும் பெற்று, சடகோபம் சாதிக்கப்பெற்றுத் தெளிவுபெற்ற நிலையில் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் பாசுரம் நினவிைற்கு வருகின்றது.

‘நேசத்தால் அன்றுஉலகை நீர்வார்க்க வைத்துஅளந்த வாசத்தாள் என்தலைமேல் வைத்திலையேல்-நாசத்தால் பாரகத்துள் அன்றியான் பாழ்நரகில் வீழ்ந்துஎன்கொல்? ஊரகத்துள் நின்றாய் உரை.”

35. பெரி. திருமடல் - கண்ணி (107-113) 36. நூற். திருப். அந்- 81.