பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத்திருப்பதிகள் 52

(நேசத்தால்-கருணையினால்; அன்று-முன்னாளில்; வாசத்தாள் - நறுமண முடைய திருவடி (மெய்யாடியார் அருச்சித்த திருத்துழாய் முதலியவற்றின் சம்பந்தத்தால் மணம் வீசும்); நாசத்தால்-நாசமடைந்து வீழ்ந்து என் கொல்-வீழ்ந்தால்தான் என்ன, உரை - கூறுவாய்)

என்ற பாசுரத்தை ஓதி உளங்கரைகின்றோம். அய்யங்கார் நிலையில் நாமே இருந்து எம்பெருமானை வினவுவது போன்ற உணர்ச்சியுடன் திருக்கோயிலினின்றும் வெளிவருகின்றோம்.

பிராகாரத்தில் ஒரிடத்தில் மனஅமைதியுடன் அமருகின் றோம். திருக்கோயில் அலுவலர் ஒருவருடன் உரையாடு கின்றோம்; சில செய்திகளையும் அறிகின்றோம். ஆண்டுதோறும் பெரிய திருவிழா தைத் தினங்களில் (சனவரி-பிப்பிரவரி) நடைபெறுகின்றது. வைகுண்ட ஏகாதசியன்று முற்பகல் திருப்பாடகம், திருப்பவள வண்ணம், பச்சை வண்ணம், ஊரகம், பரமேச்சுர விண்ணகரம், திருத்தண்கா ஆகிய தலத்து எம்பெருமான்கள் யாவரும் பெரியதிருவடியின்மீது இவர்ந்து நான்கு இராஜவீதிகளிலும் உலாவரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆயிரக்கணக்கான மெய்யடியார்களும் ஊர்ப்பெருமக்களும் வேற்றுர் வாசிகளும் கங்கைகொண்டான் மண்டபத்தருகே கருடசேவைக்காகக் காத்திருக்கும் காட்சி அற்புதமாக இருக்கும்.

உலகளந்த பெருமாள் கோயில் மிகப்பழமையானது. பெருமையுடையது. ஆயினும், கவர்ச்சிகரமான சித்திர வேலைப்பாடுகளும் அற்புதமான சிற்பக்கலை நுட்பங்களும் அமைந்த திருக்கோயில் அன்று இது. என்றாலும், கருவறைக்கு மேலுள்ள விமானம் மிகவும் கவர்ச்சிகரமானது என்றே சொல்ல வேண்டும். இந்தச்செய்திகளை அறிந்தவண்ணம் மனநிறைவு பெற்ற நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.


4


3.