பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்டப் பெருமாள் 55

நம்முடைய சீற்றத்திற்கு இலக்கான இவனைக் குற்றங்கட்குத் தகுந்தவாறு தண்டிக்காமல் அவற்றைப் பொறுத்து அங்கீகரித்தால் சாத்திரங்களின் மரியாதை குலையாதோ?” என்றன்றோ உம்முடைய திருவுள்ளத்தில் ஒடுகின்றது? அங்ஙனமாயின், அவற்றைக் காப்பாற்றாமல் இவனுடைய குற்றங்களுக்குத் தகுதியாகத் தண்டனை விதித்தால் உம்முடைய கருணை முதலான குணங்கள் ஒளிபெறுவது யாங்ஙனம்? அத்திருக்குனங்கள் ஒளிபெறுவது இவனைக் காப்பாற்றிய பொழுதன்றோ? ‘இவனைத் தண்டியாதபோது சாத்திரமரியாதை குலையும்; காப்பாற்றாதபோது கருணை முதலான குணங்கள் ஒளிபெறா; என் செய்வோம்?’ என்று நீவிர் அச்சங்கொள்ள வேண்டியதில்லை. சாத்திரத்தை உம்மிடத்தில் பற்று இல்லாதவர் களிடம் பிரயோகித்து, கருணை முதலான குணங்களை உம்மீது பற்றுள்ளவர்களிடம் காட்டினால் இரண்டும் தலையெடுக்கும். எனவே, இவனைக் காத்தல் உம் கடன்’ என்று உபதேசிப்பாள்.

இரண்டாவதாகச் சேதநனை இவள் திருத்தும் முறையினைச் சிந்திக்கின்றோம். ‘பிள்ளாய், உன் குற்றங்களின் மிகுதியைப் பார்த்தால், உனக்கு ஒரிடத்திலும் காலூன்ற இடம் இல்லை. ஈசுவரன் யாதொன்றாலும் தடைசெய்யப்பெறாத சுவாதந்திரியத்தை உடையவனாகையால், குற்றங்களைச் சரியாகக் கணக்கிட்டு உன்னை நுகர்விப்பவனாக்குவான் என்பது ஒருதலை. இக்கேட்டினின்றும் தப்பவேண்டும் என்று நீ விழைந்தால், அவன் திருவடியைப் பற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. ‘குற்றங்கள் மலிந்த என்னை அவன் அங்கீகரிப்பா னோ, அல்லது தண்டிப்பானோ?’ என்று அஞ்சவேண்டிய தில்லை. அவன்மீது நீ பற்றுடையவனாக ஆனவுடனேயே உன்னுடைய குற்றங்கள் அனைத்தும் பொறுத்தருளும் குணங்களால் நிறைந்தவன் என்று உலகம் புகழும் ஒப்பற்ற பெருமான் அவன். எனவே, நீ உய்யவேண்டுமாகில் அவனை அடையப் பாராய்’ என்று மேலான நல்லுபதேசம் செய்வாள் எம்பிராட்டி.

பெரிய பிராட்டியாரின் இத்தன்மையை நினைந்தே ‘ஈசுவர சுவாதந்தர்யத்தையும் சேதநனுடைய அபராதத்தையும் கண்டு

... ? - 9

அகலமாட்டாள் என்று குறிப்பிடுகின்றது முமுட்சுப்படி.

9. முமுட்சு - 132