பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

கண்டிப்பு என்ற குணத்தையுடைய நாயகனையும் குறும்பு நிறைந்த மக்களையும் பெற்ற ஒர் இல்லத் தலைவி எங்ஙனம் அவர்களை விட்டுத் தான் தாய்வீடு செல்லமாட்டா ளோ, அங்ஙனம் குற்றத்திற்கேற்ற தண்டனை அளிப்பதில் ஊன்றி நிற்கும் கணவனையும் குற்றங்களையே செய்து கொண்டுபோகும் மக்களையும் பெற்ற பிராட்டியாரும் ‘அகலகில்லேன் இறையும்’ என்று எம்பெருமான் திருமார்பில் என்றும் உறைகின்றவளாக இருக்கின்றாள்.

பெண்மைக்கு இயல்பாக அமைந்த குணங்கள் அன்பும் அருளும். அன்பினால் பிராட்டியார் உலகத்தைத் தம்வசப்படுத்தி உயிர்களைத் திருத்தி அமைக்கின்றார். மற்றொரு குணமாகிய அருளால் உயிர்களை இறையிடம் கொண்டுபோய்ச் சேர்க்கின்றார். இவ்விரு பண்புகளாலும் பிராட்டியாருக்கு ஒரு தனி அழகு உண்டாகின்றது. அவ்வழகால் ஆண்மைத்தன்மை வாய்ந்த இறையைத் தம் வசப்படுத்துகின்றார். அவ்வழகில் ஈடுபட்ட இறைவன் இவர் சொற்படி நடக்க உடன்படுகின்றான். :f குணங்கள் வாய்ந்த இப்பெண்மை நமக்கு நன்மையேயன்றித் தீமையைப் புரியாது’ என்றும் நம்பிக்கை ஆண்மைக்கு உண்டாகின்றது. இதனால் ஆண்மை வாய்ந்த இறைவன் பெண்மை வாய்ந்த பிராட்டியாரின் கருத்தின்படிச் செயலாற்றுகின்றான். இவர், தம் அருளினால் இறைவனிடம் கொண்டுசெல்லும் சேதநர் (உயிர்கள்) யாவரும் பெறாப்பேறு பெற்று இன்பந்துய்க்கின்றனர். இவ்விடத்தில்,

“உபதேசத்தாலே மீளாதபோது சேதநனை

அருளாலே திருத்தும், ஈசுவரனை அழகாலே திருத்தும்”

என்னம் ஸ்ரீவசனபூஷண வாக்கியங்கள் நம் நினைவுக்கு வருகின்றன; அவற்றையும் சிந்திக்கின்றோம். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் அலைபாய்ந்தவண்ணம் வைகுண்டப் பெருமாள் சந்நிதியை நோக்கி வருகின்றோம்.

வைகுண்டப் பெருமாளைத் திருமங்கையாழ்வார் மட்டிலு மே ஒரு பதிகத்தால்’ மங்களாசாசனம் செய்துள்ளார். கோயிலின் எல்லையை நெருங்க நெருங்க ஆழ்வார் பாசுரங்கள் நம் சிந்தையில் குமிழியிட்டெழுகின்றன.

10. நீவச. பூஷ - 14. 11. பெரி. திரு-2.9.