பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்டப் பெருமாள் 59

“தூம்புடைத் திண்மை வன்தான் களிற்றின்

துயர் தீர்த்து அரவம்வெருவ முனநாள்

பூம்புனல் பொய்கை புக்கான்’

(துரம்பு-துளை, கை-துதிக்கை; வன்தாள்-வரியகால்: களிறு-யானை, அரவம் -

காளிய நாகம்; வெருவ-அஞ்சும் படியாக பூம்புனல்-அழகிய நீர் பொய்கை

குளம்)

என்பது இந்நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் பாசுரப் பகுதி. மீனமர் பொய்கை நாள்மலர் கொய்யுங்கால் முதலையினால் அடர்ப் புண்ட கான்அமர் வேழத்தின் இடரைத் தீர்த்தருளின பெருமான் இந்திரியங்களாகிய பல முதலைகளின் வாயில் அகப்பட்டுத் தவிக்கும் நம்மையும் காத்தருள்வான் என்பது குறிப்பு. காளியன் அப்பொய்கையில் வந்து சேர்வதற்கு முன்னரே கசேந்திரன் இருந்த நிலையைக் கூறுவதால் ‘பூம்புனல்’ எனப்பட்டது என்பதாகக் கருதுகின்றோம்.

அடுத்த நான்கு பாசுரங்களிலும் எம்பெருமானின் நரசிம்மாவதாரம், வாமன-திரிவிக்கிரமாவதாரம், இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய நான்கு அவதாரங்களின் வீரச் செயல்கள் அநுசந்திக்கப்பெறுகின்றன.

‘திண்படைக் கோளி யின்உருவாயத்

திறலோன்அக லம்செருவில் முனநாள்

புண்படப் போழ்ந்த பிரான்’

(திண்படை-கூரிய ஆயுதம் (நகம்); கோள்-வலிமிக்க அரி-சிங்கம்; திறலோன்

- மகாபலசாலி, அகலம்-மார்பு: செரு-போர்; போழ்ந்த-கிழித்தெறிந்த: பிரான் - எம்பெருமான்)

என்பது நரசிம்மமூர்த்தியின் அநுசந்தானம். பிரகலாதன் பொருட்டுக் கூரிய நகரங்களையும் கோரப் பற்களையும் கொண்ட நரசிங்க மூர்த்தியாகத் தோன்றி இரணியனது மார்பினைப் பிளந்தெறிந்த எம்பெருமானின் வீரச்செயலைக் காட்டி நிற்பது இச்சொல்லோவியம். இரணியன் தன்னைப் பலவாறு இழிவாகப் பேசிய போதெல்லாம் எம்பெருமான் சினங்கொண்டு யாதும் செய்யவில்லை. ஆனால், பாகவ தோத்தமனான பிரகலாதனைத் துன்புறுத்தியதை அவனால்

17. பெரி. திரு. 2.9:5. 18. பெரி. திரு - 2.9:6