பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

பொறுக்கமுடியவில்லை. இரணியனை முடிப்பதற்கே திட்டம் வகுக்க வேண்டியதாயிற்று. இவ்விடத்தில்,

“ஈசுவரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம், பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்

3 * 19

(ஆனைத்தொழில்-மனிதர்களுடைய செயல்கட்கு அப்பாற்பட்ட செயல்கள்:

ஜீயர் - நஞ்சீயர்; இவர் பட்டருடைய சீடர், நம்பிள்ளையின் ஆசாரியர்)

என்ற ஸ்ரீவசன பூஷணத்தின் வாக்கியதைச் சிந்திக்கின்றோம். பிரகலாதன், மகரிஷிகள் முதலான அந்தந்த பாகவதர்கள் திறத்தில் அவரவர்கள் செய்த அபசாரம் பொறாமையாலே எம்பெருமான் செய்றகரியனவற்றை மேற்கொண்டான் என்று நஞ்சியர் கூறுவதை நினைக்கின்றோம்.

அடுத்தபாசுரத்தில் வாமன - திரிவிக்கிரமாவதார சேவை,

“இலகிய நீள்முடி மாவலிதன்

பெருவேள்வியில் மாணுருவாய் முனநாள்

சலமொடு மாநிலம் கொண்டவன்’

(இலகிய-விளங்கா நின்ற; மாண்உரு-(வாமன) பிரமச்சாரி உரு சலமொடு -

கபடத்துடன்; மாநிலம்-பெரிய நிலம்)

என்பது ஆழ்வார்காட்டும் சொல்லோவியம். எம்பெருமான் ‘பொன் இலங்கு புரிநூலும் தோளும் தாளப் பொல்லாத குறள்’ பிரமச்சாரியாய் மாவலியின் வேள்வி பூமியில் எழுந்தருளி, ‘கொள்வன் நான், மாவலி! மூவடிதா’ என்று வஞ்சித்து மூவடி மண் நீரேற்று மூவுலகத்தையும் திருவடிக்கீழ்க் கொண்ட பெருமான் வந்து தங்கியுள்ள இடம் பரமேச்சுர விண்ணகரம். நம் போன்ற அகங்காரிகளையும் தன் திருவடிக்கீழ்க் கொள்வதற் காகவே அங்கு வந்திருக்கின்றார் என்பது ஆழ்வார் பெறவைக்கும் குறிப்பு அர்ச்சாவதார மூர்த்தியில் அவதார மூர்த்தியைக் காணும்படிச் செய்யும் ஆழ்வாரின் ஆர்வத்தை நினைக்கின் றோம்.

“தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’ என்ற வாசகத்தின் தத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகப் பதினான்கு ஆண்டுகள்

19. பூநீவச. பூஷ - 196. 20. பெரி. திரு. 2.9:7