பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும் 69

திருநிலாத்திங்கள் துண்டம் : இந்தத் திவ்விய தேசம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் முதல் பிராகாரத்தில் உள்ளது.

“நீருரும் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்!

நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி

ஒருரும் ஒழியாமே ஒற்றித் தெங்கும்

உலகமெலாம் திரிதந்து நின்னைக் காண்பான்

தேரூரும் நெடுவீதி பற்றி நின்றேன்.”

என்ற அப்பர் பெருமானின் திருப்பாடலை ஒதுவார் ‘நிலாத் திங்கள் துண்டத்தான் சிவபெருமானே என்று நினைப்பது இயல்பு. ஆனால், அவர்கள் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்தபின்னர் தம் எண்ணத்தைக் கட்டாயம் மாற்றிக்கொள்வர். இந்த எம்பெருமான் - நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற திருநாமத்தைக் கொண்டவர் - ஏழுதலை நாகத்தைக் குடையாகக் கொண்டு மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இந்த எம்பெருமானைத் திருமங்கையாழ்வார் மட்டிலும் மூன்று சொற்கள் அடங்கிய ‘நிலாத்திங்கள் துண்டத் தாய்!’ என்ற ஒரே தொடரால் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த எம்பெருமானையும் அவர் அருகில் உள்ள நேரொருவரில்லா வல்லித் தாயாரையும் சேவித்து விடைபெறும் நிலையில்,

“மீண்டும் தெளியார்கள் மேதினியோர் நின்அடிப்பூப் பாண்டரங்க மாடி படர்சடைமேல்-தீண்டி கலாத்திங்கள் துண்டத்தின் மீதிருப்பக் கண்டும்; நிலாத்திங்கள் துண்டத் தானே!”

(மீண்டும்-மறுபடியும்; மேதினியோர்-பூமியிலுள்ளோர்; பாண்டரங்கமாடி - சிவபெருமான் (பாண்டரங்கச் கூத்தாடியவன்), தீண்டி-பொருந்தி:

கல்ாத்திங்கள் துண்டம் - இளம்பிறைச் சந்திரன்)

என்ற திவ்வியகவியின் பாசுரம் நினைவிற்கு வர அதனையும் அவன் சந்நிதியிலேயே ஓதி உளம் நெகிழ்கின்றோம்.

16. அப்பர் தேவாரம் - 6.25 :9.

17. திருநெடுந் - 3. எம்பெருமானின்திருவயிடேகத்தில் ஒரு பிறைச்சந்திர வடிவம்

உள்ளது.

18 நூற். திருப். அந்-80.