பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும் 71

ஒளிந்து கொண்டிருக்கும் கள்வனைப்போல் ஒளிந்து கொண்டி ருப்பதைக் காண்கின்றோம். இது கருதியே இவரைத் திருமங்கையாழ்வாரும் ‘கள்வா!’ என்ற ஒரே தொடரில் மங்களாசாசனம் செய்தனர் போலும்! குமுதவல்லித் தாயாரை மணந்துகொள்ளும் பொருட்டு அவர் விதித்த நிபந்தனையாகிய நாள்தோறும் 1008 பாகவதர்கட்குத் திருவமுது செய்வித்தல் என்ற பணியைச் செவ்வனே நிறைவேற்றும் பொருட்டுக் கள்வர் கூட்டத் தலைவனாக நின்று கொள்ளையடித்த பெருமானன்றோ இவர்? வேறு ஆழ்வார்கட்கும் இந்த எம்பெருமான் கிட்ட வில்லை. திருநகரியில் திருப்புளியாழ்வாரின் கீழிருந்து கொண்டு மானசீகமாக மங்களாசாசனம் செய்த நம்மாழ்வாரையும் அவர் பாசுரங்களில் அகப்படாது ஏமாற்றிவிட்ட ‘கள்வன் இந்த எம்பெருமான்.

திருக்கள்வனூர் எம்பெருமானின் திருநாமம் ஆதிவராகப் பெருமாள் என்பது. நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கும் இந்த எம்பெருமானையும், அருகில் பக்கத்துச் சுவரில் இன்னொரு மாடத்தில் காட்சி அளிக்கும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வணங்குகின்றோம்.

பிறர் அறியாதபடி காரியஞ்செய்பவனைக் கள்வன் என்று கூறுவது உலகவழக்கு என்பதை நாம் அறிவோம். எம்பெரு மானும் ‘இராமட மூட்டுவாரைப் போலே” உள்ளே பதிந்து கிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருமவனா கையாலே’’’ கள்வன் எனப்படுகின்றான் என்று எண்ணுகின் றோம். உண்மையில் அப்பெயர் அவனுக்கே தகும் என்றும் உடன்படுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது.

20. திருநெடுந் - 3.

21. மகன் ஒருவன் தன் தாயிடம் நேராகத் தனக்கு வேண்டுவன பெற்று இன்புறாமல் அகந்தையினால் துன்புற்று உழல்கின்றான். அன்புள்ளம் கொண்ட தாய் அவனைக் கைவிடுவதற்கு மனமின்றி, பிறர் அறியாமல், இரவில் அன்னமிடும் சத்திரங்கட்குச் சென்று, தன் முகத்தைக் காட்டாமல் மறைந்திருந்து, அவனுக்கு அன்னம் இட்டு அவன் பசிப் பிணியை ஆற்றி அவனை உயிர் வாழச் செய்தலே இராமட மூட்டுதல்’ என்பது. 22. முமுட்சு - 104.