பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

(ஜஸ்டிஸ் என்.கிருஷ்ணசாமி ரெட்டி)

மண்ணில் அரங்கமுதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதிநூற் றெட்டினையும்-நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவோர் கேட்டிருப்பார்
பொற்பாதம் என்தலைமேல் பூ. [1]

ஞானானந்த சொரூபனாய், ஞான சக்தியாதி கல்யாண குணங்களையுடையவனாய், தேசகால வஸ்து பரிச்சேதமில்லாதவனாய், தேஜோமயமான திவ்விய மங்கள விக்கிரகமுடையவனாய், எல்லாவுலகங்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் கர்த்தாவாய், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பயன்களை அளிப்பவனாய், இலட்சுமி பூமி நீளா நாயகனாய் இருக்கும் நாராயணன் சேதநருக்கு உவப்பான பொன், வெள்ளி, தாமிரம், சிலை, மரம், மண் முதலிய திரவியங்களையே திருமேனியாகவும், அவரிட்டதுவே பெயராகவும் கொண்டு, தேசகால அதிகார பேதமின்றி எல்லோராலும் கண்டு பற்றுதற்குச் சௌலப்பியம் சௌசீல்யம் கருணம் முதலிய நிறைய குணங்களுடைய அர்ச்சாவதாரமாக, இருந்த கோலம், நின்ற கோலம், கிடந்த கோலமாக, ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக’, உலகோர் உய்யும் பொருட்டு இம்மண்ணுலகில் திருக்கோயில் கொண்டு சேவை சாதித்துக் கொண்டிருக்கின்றான். -

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இத்திருக்கோயில்களை நூற்றெட்டுத் திருப்பதிகளாகக் கொள்வது வைணவ மரபு. இத்திருப்பதிகள் பூர்வாசார்யர்களாலும், ஏனைய பெரியோர் களாலும் போற்றப்பட்டவை தியானிக்கப்பெற்றவை. இவ்வளவு சிறப்புப்பெற்ற திவ்விய தேசங்களை தரிசிப்பவர்களும்,

v

  1. நூற்.திருப்.அந்.