பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும்

73

சைவரே இந்தப் பெருமாளுக்கும் கைங்கரியம் செய்து வருகின்றார்.

திருவேளுக்கை: இந்தத் திவ்விய தேசம் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ளது. ‘வேளிருக்கை’ என்பது ‘வேளுக்கை’ எண்மருவி வழங்கி வருகின்றது. இது வடமொழியில் வேதாந்த தேசிகர் பணித்த துதியொன்றில் ‘காமாஸிகா’[1] என்று வழங்கப் பெறுகின்றது. நாம் தங்குமிடத்திலிருந்து குதிரைவண்டியில் இத்திருத்தலத்திற்கு வருகின்றோம். திருக்கோயில் மிகச் சிறியது. மிகுந்த சிரமத்துடன் இதன் இருப்பிடத்தைக் கண்டறிகின்றோம். இந்த எம்பெருமானுக்குக் கைங்கரியம் சரியாக நடைபெறவில்லை. திருவிளக்கு போடுவதற்குக் கூட சரியான ஆள் இல்லை என்றால் இதர கைங்கரியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லையல்லவா? இந்த எம்பெருமானைப் பேயாழ்வார் [2] திருமங்கையாழ்வார் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

“மன்னும் மதிள்கச்சி
        வேளுக்கை ஆளரியை”[3]

(ஆள்அரி-நரசிம்மம்)


என்பது திருமங்கையாழ்வாரின் திருவாக்கு. பேயாழ்வார் இத்திருப்பதியோடு வேறு சில திருப்பதிகளையும் சேர்த்துப்பேசி இனியராகின்றார்.

“விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேளுக்கை-மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு”[4]

(விண்ணகரம்-ஒப்பிலியப்பன் சந்நிதி; திருவெஃகா-சொன்ன வண்ணம் செய்த பெருமாள் இருப்பிடம்: மண்நகரம் - பூமியிலுண்டான வைகுந்த மாநகர்

போன்ற; மா மாடம் பெரிய மாளிகை; தன் கோட்டி-திருக்கோட்டியூர்)

‘மண்ணகரம் மாமாடம் வேளுக்கை’ என்ற இந்த ஆழ்வாரின் திருவாக்கையொட்டியே திருமங்கையாழ்வார் ‘மன்னு மதிள்கச்சி வேளுக்கை’ என்றனர் போலும். இங்குக்

  1. காமாஸிகா - காம+ஆஸிகா-விருப்பம் பற்றி நிற்கும் இடம்.
  2. மூன். திருவந் 26,34,62.
  3. பெரி. திருமடல் - கண்ணி - 127.
  4. மூன். திருவந் - 62.